Published : 24 Dec 2019 08:21 AM
Last Updated : 24 Dec 2019 08:21 AM
மனோஜ் முத்தரசு
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால், நீட் தேர்வுக்கான தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் தள்ளிவைக்கப் பட்டுள்ளன.
வரும் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு 2020-ம் ஆண்டு மே 3-ம் தேதி நடக்கவுள்ளது. இதில் பங்கேற் கும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் நடந்த தேர்வுக்காக, 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தாமதமாக, அதாவது செப். 23-ம் தேதிதான் தொடங்கப்பட்டது. இதனால், ஒரு மாதம் பயிற்சியை ஈடுகட்ட கூடுதல் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தள்ளிவைக்கப்பட்டு, ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரி யர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பயிற்சி நடக்கும் 413 மையங்களில் 380-க்கும் அதிகமான மையங்கள் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் உள்ளன. இந்த மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளி களில் சுமார் 180-க்கும் மேலான வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதனால் பயிற்சி வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “உள்ளாட்சித் தேர்தல் கார ணமாக பயிற்சி வகுப்புகள் தற் காலிகமாகதான் தள்ளிவைக்கப் பட்டுள்ளன. ஆனால், மாணவர் களை பாதிக்காத வண்ணம், பயிற்சிக்கு தேவையான கையேடு கள், இணையத்தில் படிக்கும் வசதி கள் போன்ற எல்லா வழிமுறை களும் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.
இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இதற்காக முன்கூட்டியே, மாணவர் கள் தேர்வுக்கு தயார் ஆவார்கள். இதனால் ஏற்கெனவே தாமதமாக தொடங்கிய நீட் பயிற்சி வகுப்புகள் தற்போது மேலும் தள்ளிப்போவதால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இதர விடுமுறை காலத் தில் இன்னும் அதிகமான அளவு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பெற்றோரும் மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment