Published : 28 Nov 2019 09:33 AM
Last Updated : 28 Nov 2019 09:33 AM

இங்கிலாந்து - நியூஸிலாந்து இடையே ஹாமில்டனில் நாளை 2-வது டெஸ்ட் 

இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டன் நகரில் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டன் நகரில் இன்று தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் ஜோப்ரா அர்ச்சரைப் பார்த்து நிறவெறியைத் தூண்டும் வகையிலான சில கருத்துகளை பார்வையாளர் ஒருவர் கூறினார். இதைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவத்தை தான் மறந்துவிட்டதாகவும், 2-வது டெஸ்ட் போட்டிக்காக தான் தயாராகி வருவதாகவும் ஆர்ச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x