Published : 28 Feb 2020 10:31 AM
Last Updated : 28 Feb 2020 10:31 AM

மொழிபெயர்ப்பு: வெளவாலிடம் இருந்து தப்பிப்பதில் அந்துப்பூச்சி கில்லாடி

லண்டன்

Noise-cancelling scales in moths help evade bats: Study

London,

Some species of moths can absorb as much as 85 per cent of the sound that hunting bats pitch and reflect off the insects to locate them, according to a study which may lead to advanced, bio-inspired acoustic camouflage technology.

The study, published in the journal Royal Society Interface, revealed that the moths, which are unable to hear the ultrahigh frequency calls of bats, evolved this defensive strategy to help them survive.

According to the researchers, including those from the University of Bristol in the UK, bats produce high frequency sound to search for and find prey, putting huge predation pressure on nocturnal insects.

Countering this, they said, many nocturnal insects evolved the ability to hear the ultrasonic calls of bats, which allows them to actively evade approaching bats. However, many moth species, the study noted, cannot hear, and have a different mechanism to defend against bats.

"We were amazed to see that these extraordinary insects were able to achieve the same levels of sound absorption as commercially available technical sound absorbers, whilst at the same time being much thinner and lighter," said Thomas Neil, lead author of the study from Bristol University.

"We are now looking at ways in which we can use these biological systems to inspire new solutions to sound insulating technology" Neil said.

-PTI

வெளவாலிடம் இருந்து தப்பிப்பதில் அந்துப்பூச்சி கில்லாடி

தனக்கான இரையைக் கண்டுபிடிக்க வெளவால்கள் அல்ட்ராசவுண்ட் ஒலியை வெளியிடும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். வெளவால் ஏற்படுத்தும் இந்த சத்தம் பூச்சிகளின் உடல் மீது மோதி எதிரொலித்து வெளவாலின் செவியைச் சென்றடையும். அதை வைத்தே தனக்கான இரை எங்குள்ளது என்பதை வெளவால் கண்டுபிடித்து அதை தாக்கும்.

வெளவாலின் இந்த ஒலி விளையாட்டில் இருந்து தப்பிப்பதில் அந்துப்பூச்சி கில்லாடியாம். எப்படியென்றால், தன்னுடைய உடல் மீது மோதும் வெளவாலின் சத்தத்தை 85 சதவீதம் வரை அந்துப்பூச்சி உள்வாங்கிக் கொள்ளுமாம். 15 சதவீதம் மட்டுமே சத்தம் எதிரொலிக்க செய்வதன் வழியாக வெளவாலுக்கு சவால்விடுகிறது அந்துப்பூச்சி.

ஒலி ஏமாற்று வித்தை தொழில் நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் இந்த ஆய்வு முக்கிய இடம் பிடித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரிஸ்டால் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ராயல் சொசைட்டி இன்டர்ஃபேஸ் ஆய்விதழில் பிரசுரமாகி இருக்கிறது. இரவு நேர பூச்சிகளை வேட்டையாட வெளவால் உயர் அதிர்வெண் ஒலியை எழுப்பும். வௌவாலிடம் சிக்காமல் தப்பிக்கப் பல இரவுநேர பூச்சிகள் அல்ட்ராசவுண்ட் ஒலியைக் கேட்கும் திறனை காலப்போக்கில் வளர்த்துக் கொண்டதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆனால், இந்த ஒலியைக் கேட்கும் திறன் அந்துப்பூச்சிக்குக் கிடையாது. அதற்கு பதில் தன்னை தற்காத்துக் கொள்ள இயற்கை கொடுத்த கொடை வெளவால் எழுப்பும் ஒலி தன் மீது பட்டு எதிரொலிக்க விடாமல் அதை உள்ளிழுத்துக் கொள்வதாகும்.

இந்த ஆய்வின் தலைமை ஆராய்ச்சியாளரான தாமஸ் நீல் பேசுகையில், “வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப ஒலி உள்ளங்கியானது எவ்வளவு ஒலியை உள்ளிழுத்துக் கொள்கிறதோ அதே அளவிலான ஒலியை உள்ளிழுக்கும் திராணி அந்துப் பூச்சிகளுக்கு இருப்பதை பார்த்தால் அதிசயமாக இருக்கிறது. அதிலும் இவை மிகவும் மெலிந்து எடையில் குறைந்து காணப்படுகின்றன. ஒலி காப்பு தொழில்நுட்பத்தில் புதிய தீர்வுகளைக் காணும் வழிகள் குறித்துச் சிந்திக்க அந்துப் பூச்சிகள் தூண்டியுள்ளன” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x