Published : 26 Feb 2020 10:24 AM
Last Updated : 26 Feb 2020 10:24 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? - என்னை தம்பி பயமுறுத்திட்டான்!

ஜி.எஸ்.எஸ்.

கஜானன், மாறன் இருவரும் பள்ளி நண்பர்கள். அவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

Gajanan – Yesterday my brother made me fear.
Maran - Which brother, older or younger?
Gajanan – My younger brother.
Maran - What did he do?
Gajanan – He hide my science book and today is my science test!
Maran - Then what happened?
Gajanan – I started cry. He saw it, said apology and gave me the book.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள். மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

என் தம்பி என்னை பயமுறுத்தி விட்டான் என்பதை my brother made me fear என்று கூறக் கூடாது. My brother made me afraid என்று கூறலாம். அடுத்தது எந்த சகோதரன், மூத்தவனா, இளையவனா என்பதைக் கேட்க older or younger என்ற சொற்களைப் பயன்படுத்துகிறான் மாறன். Elder or younger என்றுதான் அவன் கேட்டிருக்க வேண்டும். உறவினர்களுக்கு இடையில் ஒப்பிடப்படும்போது older என்பதற்குப் பதிலாக elder என்ற சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம்.

கஜானன், He hide my science book என்று கூறுகிறான். நிகழ்காலம் என்றால் கூட he hides என்றுதான் கூறியிருக்க வேண்டும். ஆனால், இது நடந்தது அதற்கு முன் தினத்தில். எனவே he hid my science book என்றோ, he had hidden my science book என்றோ அவன் கூறியிருக்க வேண்டும்.

I started cry என்று மாறன் கூறுவது தவறு. I started to cry என்றோ, I started crying என்றோ அவன் கூறி இருக்கலாம். He said apology என்று மாறன் கூறுவதும் தவறுதான். He apologized என்று அவன் கூறி இருக்க வேண்டும். அல்லது he said sorry என்று கூறி இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x