Published : 21 Feb 2020 10:17 AM
Last Updated : 21 Feb 2020 10:17 AM

மொழிபெயர்ப்பு: காணொலியை பார்த்து பிடிக்காத உணவை தவிர்க்கும் பறவைகள்

லண்டன்

Birds may learn to make better food choices by watching videos of others eating: Study

London,

Some birds may have the natural ability to learn to avoid foods that taste disgusting and are potentially toxic by watching videos of each other eating, according to a new study.

Seeing the 'disgust response' in others helped the birds blue tits and great tits, native to the European continent, recognise distasteful prey by their peculiar markings without having to taste them, the study, published in the Journal of Animal Ecology,
noted.

According to the study, blue tits (Cyanistes caeruleus) learned best by watching their own species, whereas great tits (Parus major) learned just as well from great tits and blue tits.

The scientists said the birds can also decrease the likelihood of bad experiences -- and potential poisoning -- by watching others.
"Blue tits and great tits forage together and have a similar diet. By watching others, they can learn quickly and safely which prey are best to eat," said study co-author Liisa Hamalainen from the University of Cambridge.

Many insect species, such as ladybirds, firebugs, and tiger moths have developed conspicuous markings and bitter-tasting chemical defences to deter predators, the scientists said.In the study, the researchers showed each bird a video of another bird's response as it ate a repulsive prey
item.

The TV bird's disgust response to unpalatable food -- including vigorous beak wiping and head shaking -- provided information for the watching bird, the study noted.

Both blue tits and great tits ate fewer of the disgusting 'prey' packets after watching the bird on TV showing a disgust response to those packets, the study noted.

- PTI

காணொலியை பார்த்து பிடிக்காத உணவை தவிர்க்கும் பறவைகள்

மற்ற பறவைகள் சாப்பிடும் காணொலியை உற்றுக் கவனித்து தனக்குப் பிடிக்காத இரையைத் தவிர்க்க சில பறவை இனங்கள் கற்றுக் கொள்வதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிடிக்காத உணவை உட்கொள்ளும் போது பறவைகள் வெளிப்படுத்தும் உடல் மொழியை கவனிக்கும் பழக்கம் நீலப் பட்டாணிக் குருவி, பெரும் பட்டாணிக் குருவி ஆகிய ஐரோப்பிய பறவை இனங்களுக்கு உண்டு.

தான் சுவைக்காவிட்டாலும் மற்ற பறவைகள் சாப்பிடும் விதத்தை பார்த்தே தனக்கு தேவை இல்லாத உணவை அடையாளம் காணும் திறன் இந்தவகை பறவைகளுக்கு இருப்பதாக ‘அனிமல் ஈகாலஜி’ ஆய்விதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும் நீலக் குருவியானது தன்னுடைய பறவை இனத்தை மட்டுமே கவனித்து கற்றுக்கொள்ளுமாம் பெருங்குருவி என்பதோ தன்னுடைய இனப்பறவைகள் மட்டுமல்லாது நீலக்குருவியையும் பார்த்துக் கற்றுக்கொள்ளுமாம். இந்த பழக்கமானது வெறுக்கத்தக்க உணவைத் தவிர்க்கவும் நஞ்சு நிறைந்த தீனியில் இருந்து தப்பிக்கவும் அவற்றுக்கு உதவுகிறது என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள்.
இது குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லீசா ஹமலெய்னென் கூறுகையில், “கூட்டாக சேர்ந்து இரையை தேடி ஒரே மாதிரியான இரையை உட்கொள்ளும் பழக்கம் நீலக்குருவிக்கும் பெருங்குருவிக்கும் உள்ளது.

பிற பறவைகளை கவனித்து எதை சாப்பிடுவது உசிதம் என்பதை வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் இவற்றுக்கு உண்டு. குறிப்பாக நஞ்சு நிறை தீனியைத் தவிர்க்க அவை துரிதமாக கற்றுக்கொள்கின்றன. சில வகை வண்டுகள், அந்துப்பூச்சிகள் தங்களை தற்காத்துக்கொள்ள கசப்பான ரசாயனத்தை வெளியிடும்” என்றார். இந்த ஆராய்ச்சியை முன்னிட்டு பிடிக்காத இரையை தின்னும் பறவைகளின் காணொளி சில பறவைகளுக்கு காட்டப்பட்டன.

அவை பிடிக்காத இரையை சுவைத்தவுடன் தலை அசைத்தல், அலகை துடைத்துக்கொள்ளுதல் போன்ற சைகைகளை வெளிப்படுத்தின. இவற்றை உற்று கவனித்த நீலக்குருவிகளும் பெருங்குருவிகளும் தங்களிடம் அதே போன்ற இரை அளிக்கப்பட்ட போது அவற்றைச் சுவைக்க மறுத்தன.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x