Published : 20 Feb 2020 10:10 AM
Last Updated : 20 Feb 2020 10:10 AM
ஜி.எஸ்.எஸ்
செந்தில் அந்தப் பகுதிக்குப் புதியவன். அவன் அம்மா சில மளிகை சாமான்களை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பி இருக்கிறார். வழியில் தென்படும் கணபதி என்பவரிடம் இது தொடர்பாகப் பேசுகிறான் செந்தில். அந்த உரையாடல் இது.
Senthil – I want to buy something. Where is the shop?
Ganapathi – What sort of shop do you need?
Senthil – Maligai shop.
Ganapathi – Go further. It is on your left side.
Senthil – Is it very far away?
Ganapathi – No. it is nearer.
Senthil – Can I walk and go?
Ganapathi – Sure.
Senthil – Thanks sir.
Ganapathi – My pleasure.
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
புதியவர்களிடம் ஏதோ ஒரு தகவலைக் கேட்கும்போது “excuse me’’ என்றபடி தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும். செந்திலுக்கு இது தெரியவில்லை. மளிகைக் கடை என்பதை grocery shop என்பார்கள்.
“Is it very far away?” என்று செந்தில் கேட்கிறான். இதில் away என்ற வார்த்தை தேவை இல்லாதது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் “No. it is nearer” என்கிறார் கணபதி. Nearer என்பது ஒப்பீட்டு வார்த்தை. இரண்டு விஷயங்களை ஒப்பிட்டால் மட்டுமே இப்படிப் பயன்படுத்த முடியும்.
The grocery shop is nearer than vegetable shop என்பதுபோல. எனவே கணபதி “No. It is nearby” என்று குறிப்பிட்டு இருக்கலாம். அங்கு நடந்தே போக முடியுமா என்பதைக் கேட்க நினைக்கும் செந்தில், can I walk and go என்கிறான். இது தவறு. Is it at walkable distance? என்று அவன் கேட்டிருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT