Published : 18 Feb 2020 10:16 AM
Last Updated : 18 Feb 2020 10:16 AM
Walking 10,000 steps each day not enough to prevent weight gain: Study
Washington
No amount of walking can prevent weight gain by itself, according to a study which suggests that the widely practised standard of pacing 10,000 steps a day to lose weight may not be solely effective.
Researchers, including those from Brigham Young University in the US, studied 120 college freshmen over their first six months of college as they participated in a step-counting experiment.
According to the study, the participants walked either 10,000, 12,500 or 15,000 steps a day, six days a week for 24 weeks, while the scientists tracked the amount of calories the freshmen consumed and their weight.
The scientists examined if exceeding the recommended count of 10,000 steps per day would minimise weight and fat gain in the college students, the study noted.
According to the study, the students gained weight even if if they walked more than even 15,000 steps. Students in the study gained on average about 1.5 kilogrammes (kg) over the study period, the researchers said.
A one to four kilogramme average weight gain is commonly observed during the first academic year of college, according to earlier studies, they said.
"Exercise alone is not always the most effective way to lose weight," said study lead author Bruce Bailey, professor of exercise science at BYU.
"If you track steps, it might have a benefit in increasing physical activity, but our study showed it won't translate into maintaining weight or preventing weight gain," Bailey said.
Although weight was not affected by the increased steps, there was a positive impact on physical activity patterns, which "may have other emotional and health benefits," the researchers said in a statement.
- PTI
எவ்வளவு நடந்தாலும் உடல் எடை குறையாது: புதிய ஆய்வு
நாளொன்றுக்கு பத்தாயிரம் அடிகள் நடந்தால் உடல் எடையைக் கணிசமாக குறைக்கலாம் என்பது பழைய சேதியாம். எவ்வளவுதான் நடந்தாலும் உடல் எடை குறையாது என்கிறது புதிய ஆய்வு. அமெரிக்காவின் ப்ரிகம் யங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையின் முடிவு இது.
இந்த ஆய்வில் 120 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைபயின்று எவ்வளவு நடக்கிறோம் என்பதையும் கணக்கில் வைத்துக்கொண்டனர்.
இதன்படி தினந்தோறும் 10 ஆயிரம் அடிகள் மட்டுமல்ல 12 ஆயிரத்து 500 அடிகள் அவ்வளவு ஏன் 15 ஆயிரம் அடிகள் வரை கூட இச்சோதனையில் பங்கேற்ற மாணவர்கள் நடந்தனர். இப்படி வாரத்துக்கு ஆறு நாட்கள் வீதம் 24 வாரங்களுக்கு நடந்தனர். இந்த 24 வாரங்களில் அம்மாணவர்கள் சாப்பிட்ட உணவின் கலோரி அளவு மற்றும் அவர்களுடைய உடல் எடை ஆகியவற்றை விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.
ஒருவேளை 10 ஆயிரம் அடிகளுக்கும் அதிகமாக நாளொன்றுக்கு நடந்தால் உடல் பருமன் குறைகிறதா, எடை அதிகரிக்கும் போக்கு மட்டுப்படுகிறதா ஆகியவை சோதிக்கப்பட்டன. ஆனால், 15 ஆயிரம் அடிகளுக்கு அதிகமாக நடந்தாலும் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது மட்டுமே இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்தது.
ஆறு மாத காலத்துக்கு இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தோராயமாக 1.5 கிலோ எடை அதிகரித்தனர். பொதுவாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டில் 1 கிலோவில் இருந்து 4 கிலோ வரை எடை அதிகரிக்கிறதாம்.
ஆகையால், “உடற்பயிற்சியின் வழியாக மட்டுமே உடல் பருமனை குறைத்துவிட முடியாது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. நடைப்பயிற்சி மூலம் உடல் சுறுசுறுப்படையலாம். ஆனால், உடல் பருமனைக் குறைக்கவோ உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவோ அது உதவாது என்பதைத்தான் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது” என்று பேராசிரியர் ப்ரூஸ் பெயிலி கூறியுள்ளார்.
உடல் பருமனைக் குறைக்க நடைப்பழக்கம் உதவாவிட்டாலும் சுறுசுறுப்பாக செயலாற்றவும், புத்துணர்ச்சியோடு இயங்கவும் உடல் ஆரோக்கியத்துக்கும் நடைப்பழக்கம் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT