Published : 18 Feb 2020 10:10 AM
Last Updated : 18 Feb 2020 10:10 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? - கடிகாரத்தை பழுது பார்த்தீங்களா?

​ஜி.எஸ்.எஸ்.

தன் வீட்டிலிருந்த இயங்காத கடிகாரம் ஒன்றை கடிகார ரிப்பேர் கடை ஒன்றில் சுரேஷ் கொடுத்திருந்தான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றிருந்தபோது அந்தக் கடையின் உரிமையாளரான மணிக்கும், சுரே​ஷுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

Suresh – Sir, What happened? I gave you a clock.
Mani – It has been repaired.
Suresh – I know. That is why I gave it to you.
Mani – Can you recollect what was the problem in your clock?
Suresh – It was going slow.
Mani – That problem has been set right.
Suresh – In that case can I return my clock?
Mani – Yes. You can.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள். மேற்படி உரையாடல் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

முதலில் ரிப்பேர் என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்வோம். ஒரு பொருள் ரிப்பேர் ஆகிவிட்டது என்றால் அந்தப் பொருள் கெட்டுவிட்டது என்று பொருள் அல்ல. கெட்டுவிட்ட அந்தப் பொருள் சரி செய்யப்பட்டுவிட்டது என்று தான் அர்த்தம். இதைப் புரிந்து கொள்ளாததால் சுரேஷ் தன் உரையாடலில் சில தவறுகளைச் செய்கிறான்.

The clock was going slow என்கிறான் சுரேஷ். மாறாக the clock was losing the time என்றும் கூறலாம்.

தொடக்கத்திலேயே சுரேஷ் “என்ன நடந்தது?’’ என்று கேட்கிறான். இது பிறரது விஷயத்தில் ​மூக்கை நுழைப்பதாகக் கருதப்படும் (உங்கள் நோக்கம் சரியான தாகக்கூட இருக்கலாம்). இதற்குப் பதிலாக Has my clock been repaired? என்று கேட்கலாம்.

பழுது பார்க்கப்பட்ட தனது கடிகாரத்தைத் தான் எடுத்துச் செல்லலாமா என்று கேட்க நினைக்கிறான் சுரேஷ். ஆனால், can I return my clock என்கிறான். இதற்குப் பொருள் ‘நான் என் கடிகாரத்தை திரும்பக் கொடுக்கலாமா?’ என்பதாகும். அவன் ‘Can I take back my clock?’ என்று கேட்டிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x