Published : 14 Feb 2020 10:48 AM
Last Updated : 14 Feb 2020 10:48 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? - என்னை கேலி செய்கிறாயா?

ஜி.எஸ்.எஸ்.

அபிராமியும் அன்னக்கிளியும் ஒரே தெருவில் வசித்தாலும் அரிதாகத்தான் சந்திப்பார்கள். அப்படி ஒரு சந்திப்பில் அவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் இது.

Abhirami – My younger brother has won a price.
Annakili – Very nice. What for?
Abhirami – In speech competition. I think it is very difficult to win a price in such competitions.
Annakili – I agree.
Abhirami – You have indicated this by shaking your head also.
Annakili – Are you making fun of me?
Abhirami – Not at all. Do not be anger.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

Price என்றால் விலை. Prize என்றால் பரிசு. Praise என்றால் பாராட்டுதல். அபிராமி தன் தம்பிக்கு பரிசு கிடைத்ததாக கூறும்போது prize என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
பேச்சுப் போட்டி என்பதை அப்படியே speech competition என்று கூறக் கூடாது. முன்னதாகவே தலைப்பு கொடுக்கப்பட அதைத் தயாரித்து வந்து பேசினால் அது Oratorical competition. அந்த நேரத்திலேயே தலைப்பு அளிக்கப்பட்டு உடனடியாகப் பேசச் சொன்னால் அது extempore competition.

தலையசைத்தலை shaking head என்று கூறக் கூடாது. Nod என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். I nodded என்றாலே நான் தலையசைத்தேன் என்றுதான் அர்த்தம். இறுதியில் அபிராமி Do not be anger என்கிறாள். Do not be angry என்பதாகத்தான் அது இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x