Published : 12 Feb 2020 10:48 AM
Last Updated : 12 Feb 2020 10:48 AM

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆண்டாக 2020-ஐ அறிவித்த பல்கலைக்கழகம்

டேராடூன்

UPES declares 2020 as the year of women empowerment

Dehradun

The University of Petroleum & Energy Studies (UPES) has launched Shakti, to empower women by implementing multiple initiatives in the areas of training and development, financial aid through scholarships, etc. It was launched last week in Delhi with the theme ‘Accelerating the gender equality journey: Empowering women from classroom to boardroom’.

On the importance of gender equality, Meenakshi Lekhi, Member of Parliament, said, “Initiatives like Shakti are a step forward in bridging the gender gap by empowering women in the real sense.” It is argued that even though women account for 48% of India’s population, they have not been equal beneficiaries of the country’s economic growth.

“It is imperative for educational institutions and boardrooms to reflect diversity and bring more women into the corporate fold. Lack of financial resources a major reason that prevents girl students from pursuing quality higher education and fulfilling their dreams. Towards this, UPES is offering a 25% scholarship exclusively for all female students in 2020,” said Sharad Mehra, chairman, Hydrocarbons Education and Research
Society.

He added that through Shakti “we aim to bridge the gender gap and create a difference in the lives of women by empowering them in the real sense. We believe Shakti will inspire many other industry players to initiate such cause and women empowerment will eventually become a movement in the coming years,” added Mehra.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆண்டாக 2020-ஐ அறிவித்த பல்கலைக்கழகம்

யூ.பி.ஈ.எஸ். என்று அழைக்கப்படும் பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் ஆய்வுகள் பல்கலைக்கழகமானது பெண்களை அதிகாரப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பயிற்சி மற்றும் வளர்ச்சி, உதவித்தொகை மூலம் நிதி உதவி அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பெண்களை ஊக்கப்படுத்த ‘சக்தி’ திட்டத்தை இப்பல்கலைக்கழகம் தொடங்கி இருக்கிறது.

‘பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தை முடுக்கிவிடுதல்: வகுப்பறையில் இருந்து நிர்வாக தலைவர்களுக்கான அறைக்குச் செல்ல பெண்களை அதிகாரப்படுத்துதல்’ என்ற கருதுகோளுடன் ’சக்தி’ திட்டமானது கடந்த வாரம் கொண்டுவரப்பட்டது.

பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் இத்திட்டத்தை வரவேற்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேக்கி பேசியுள்ளார். பாலின சமத்துவத்தை முன்னிறுத்தி அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “பாலின இடைவெளியை நிரப்பும் நடவடிக்கைகளில் ஒரு படி முன்னேறி இருப்பதையே ’சக்தி’ திட்டம் காட்டுகிறது. உண்மையான அர்த்தத்தில் பெண்களை அதிகாரப்படுத்தும் முயற்சி இது” என்று அவர் தெரிவித்தார்.

இந்திய மக்கள் தொகையில் 48 சதவீதத்தினர் பெண்களே. இருப்பினும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை ஆணுக்குச் சமமாக அனுபவிக்க முடியாத நிலையில்தான் இந்தியப் பெண்கள் இன்றும் உள்ளனர். இந்நிலை மாற, “கல்வி நிறுவனங்களும் கார்ப்பரேட் உயர் அதிகாரிகளும் அதிக எண்ணிக்கையிலான பெண்களை கார்ப்பரேட் தளத்துக்கு அழைத்துவர வரவேண்டும். பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்க வேண்டும். தரமான உயர்கல்வி பெறுவதற்கும், தங்களுடைய கனவை அடைவதற்கும் பெரும்பாலான மாணவிகளுக்கு நிதி நெருக்கடி மிகப் பெரிய தடையாக உள்ளது.

இத்தகைய இடர்பாடுகளை அகற்ற யூ.பி.ஈ.எஸ். 25 சதவீதம் உதவித்தொகையை அனைத்து மாணவிகளுக்கும் 2020-ம் ஆண்டில் வழங்கவிருக்கிறது. பாலின இடைவெளியை நிரப்புவதன் மூலம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்து அவர்களை உண்மையான அர்த்தத்தில் அதிகாரப்படுத்தும் இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம்.

இத்தகைய இலக்கை நோக்கி மேலும் பல தொழிற்துறை ஜாம்பவான்கள் பயணம் மேற்கொள்ளவும் பெண்களை அதிகாரப்படுத்துதல் என்பது ஒரு இயக்கமாக எதிர்காலத்தில் உருவெடுக்கவும் எங்களுடைய சக்தி திட்டம் ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறோம்” என்று யூ.பி.ஈ.எஸ். பல்கலைக்கழக ஹைட்ரோகார்பன் கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத் துறையின் தலைவர் சரத் மெக்ரா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x