Published : 10 Feb 2020 11:40 AM
Last Updated : 10 Feb 2020 11:40 AM

ஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்? - ஸ்பைடர்மேன் காமிக்ஸ் படிக்கணும்!

ஜி.எஸ்.எஸ்.

அக்கா அஞ்சலிக்கும், தங்கை பூரணாவுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் இது.

Anjali – This Sunday you will be helping me in gardening. OK?
Poorna – Yes.
Anjali – Do not say off heartedly.
Poorna – No. But I need three hours.
Anjali – For what?
Poorna – To read cartoon.
Anjali – Is it a spiderman serious?
Poorna – Yes. I have read two volumes and will read three volume.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா?

அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

முதல் வாக்கியத்தை will you help me in gardening this Sunday? என்று நேரடியாகவே அஞ்சலி கேட்டிருக்கலாம்.

அரைகுறை மனதுடன் பேசுவதை half heartedly என்றுதான் கூற வேண்டுமே தவிர, off heartedly என்று கூறக் கூடாது. But I need three hours என்கிறாள் பூர்ணா. ஞாயிற்றுக்கிழமை தோட்ட வேலையில் உதவினாலும் தனக்கு வேறொரு விஷயத்திற்காக மூன்று மணி நேரம் தேவை என்கிறாள். இதைத் தெரிவிக்க I need three hours for என்று தொடங்கி காரணத்தை அவள் குறிப்பிட்டிருக்கலாம்.

Cartoon என்பது கேலிச்சித்திரம். பல ஓவியங்களாக வெளிப்படுத்தப்படும் கதையை comics என்பார்கள். எனவே இந்த சொல்லைத்தான் பூர்ணா பயன்படுத்தி இருக்க வேண்டும். Serious என்றால் ஆழமாக, விளையாட்டுத்தனம் இல்லாமல் என்றெல்லாம் பொருள் உண்டு. ஏன் முகத்தை சீரியஸா வச்சிக்கிறே என்று கேட்பது கூட இப்படித்தான். எனவே Spiderman தொடர் என்
பதைக் குறிக்க Spiderman Serial அல்லது series என்றுதான் அஞ்சலி குறிப்பிட வேண்டும்.

Three volume என்பது தவறு. Third volume என்றுதான் அது இருக்க வேண்டும். தவிர first, second, third என்றெல்லாம் எழுதும்போது அவற்றுக்கு முன்னால் the என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும். எனவே I will read the third volume என்பதுபோல் அந்த வாக்கியம் இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x