Published : 05 Feb 2020 10:41 AM
Last Updated : 05 Feb 2020 10:41 AM

மொழிபெயர்ப்பு: அலைபேசியில் பேசிக் கொண்டே நடப்பதை விடவும் ஆபத்தானது எது தெரியுமா?

டொரன்டோ

Texting while walking more dangerous than talking on phone: Study

Toronto,

People who text while walking face a higher risk of an accident than those listening to music or talking on the phone, a study has found.
The study, published in the journal Injury Prevention, found that smartphone texting is linked to compromised pedestrian safety, with higher rates of 'near misses', and failure to look left and right before crossing a road.

Researchers from the University of Calgary in Canada call for a more thorough approach to exploring the impact of distracted pedestrian behaviours on crash risk. Worldwide, around 270,000 pedestrians die every year, accounting for around a fifth of all road traffic deaths, according to the researchers.
'Pedestrian distraction' has become a recognised safety issue as more and more people use their smartphones or hand held devices while walking on the pavement and crossing roads, they said.

The researchers looked for published evidence to gauge the potential impact on road safety of hand-held or hands-free device activities.
This included talking on the phone, text messaging, browsing and listening to music.

From among 33 relevant studies, they pooled the data from 14 involving 872 people and systematically reviewed the data from another eight.
The researchers found that text messaging emerged as the potentially most harmful behaviour.

It was associated with significantly lower rates of looking left and right before or while crossing the road, and with moderately increased rates of collisions, and close calls with other pedestrians or vehicles, they said.

- PTI

அலைபேசியில் பேசிக் கொண்டே நடப்பதை விடவும் ஆபத்தானது எது தெரியுமா?

அலைபேசியில் பேசிக் கொண்டோ இயர் ஃபோனில் இசை கேட்டுக்கொண்டோ வீதியில் நடந்து செல்வதை விடவும் ஆபத்தானது தட்டச்சு செய்தபடியே நடப்பது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. காயத்தடுப்பு என்ற பொருள் தரும் ‘இன்ஜூரி ப்ரிவன்ஷன்’ ஆய்விதழில் இந்த ஆய்வுக் கட்டுரை பிரசுரமாகி இருக்கிறது. சாலையை கடக்கும் போது இடது மற்றும் வலது புறம் பார்த்துவிட்டு பாதசாரிகள் செல்வது அடிப்படை பாதுகாப்பு விதியாகும்.

ஆனால், அலைபேசியில் தட்டச்சு செய்தபடியே நடப்பவர்கள் இதனை கடைப் பிடிக்கத் தவறிவிடுகிறார்கள். கவன சிதறலுடன் சாலையைக் கடக்கும் பாதசாரிகள் எதிர்கொள்ள நேரிடும் ஆபத்துகள் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக் கனடா நாட்டைச் சேர்ந்த கல்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 70 ஆயிரம் பாதசாரிகள் மரண மடைகின்றனர். ஒட்டுமொத்த சாலை விபத்துகளில் இது ஐந்தில் ஒரு பங்காகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நடைபாதையில் நடக்கும்போதும் சாலையை கடக்கும்போதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துதல் என்பது இன்று சாலை பாதுகாப்பு குறித்த விவாதத்தில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ‘பாதசாரிகளுக்கு ஏற்படும் கவனச்சிதறல்’ என்றே இந்த சிக்கல் அழைக்கப்படுகிறது.

இத்தகைய நிகழ்வுகள் குறித்த ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் தேடினார்கள். அதில் சாலையில் நடந்தபடியே போனில் பேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல், இணையத்தை துழாவுதல், இசை கேட்டல் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 33 ஆய்வுகளின் முடிவுகளை அலசி ஆராய்ந்தனர். அவற்றில் இருந்து 872 பேர் தொடர்பான 14 ஆய்வுகள் பிரித்தெடுக்கப்பட்டன.
கிடைத்த தரவுகளை ஆராய்ந்ததில் குறுஞ்செய்திகளைத் தட்டச்சு செய்தபடியே நடப்பதுதான் மிகவும் ஆபத்தான நடவடிக்கை என்பது கண்டறியப்பட்டது. இப்படிச் செய்பவர்கள் சாலையைக் கடக்கும்போது இடது மற்றும் வலது புறம் பார்ப்பதில்லை.

இவர்களால் நெரிசல் ஏற்படுகிறது. இதுபோக மற்ற பாதசாரிகளின் மீதோ வாகனங்களின் மீதோ மோதும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x