Published : 31 Jan 2020 10:30 AM
Last Updated : 31 Jan 2020 10:30 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? - பயிற்சி வேறு, பயிற்சி செய்வது வேறு 

ஜி.எஸ்.எஸ்.

இந்திரா குழப்பத்துடன் அமர்ந்திருக்கிறாள். அந்தப் பக்கமாக வரும் அவளது அக்கா லலிதா இதைப் பார்க்கிறாள். அவர்கள் இருவருக்கிடையே நடைபெறும் உரையாடல் இது.

Indira – I am very confused.
Lalitha – Why?
Indira – I want to see a T.V. programme and I have many homeworks also.
Lalitha – Doing homework is important, is it?
Indira – Yes. But I want to see the T.V. programme also. I will do one thing. I will do my homework during advertisements are shown.
Lalitha – But it is not a good practise. Concentration is needed in studies.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின் போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

# have many homeworks என்று கூறுகிறாள் இந்திரா. இது தவறு. பன்மையிலும் homework என்றுதான் கூற வேண்டும். I have a lot of homework என்று லலிதா கூறியிருக்கலாம். ஒரு வாக்கியத்தைக் கூறிவிட்டு அப்படித்தானே என்றோ, அப்படி இல்லைதானே என்றோ கேட்கலாம். ஆனால் அந்த வாக்கியம் எதிர்மறையாக இருந்தால் அதைத் தொடரும் கேள்விப் பகுதி நேர்மறையாக இருக்க வேண்டும்.

அந்த வாக்கியம் நேர்மறையாக இருந்தால் அதைத் தொடரும் கேள்விப் பகுதி எதிர்மறையாக இருக்க வேண்டும். எனவே doing homework is important, isn’t it? என்றுதான் லலிதா கேட்டிருக்க வேண்டும்.

# will do one thing என்கிறாள் இந்திரா. இப்படி ஆங்கிலத்தில் கூறுவதில்லை. Let me do a thing என்றோ, let me do this என்றோ அவள் கூறலாம். Advertisements என்பதை commercials என்றும் கூறுவார்கள்.

தவிர advertisements are shown என்பதைவிட (அது தொலைக்காட்சி என்பதால்) advertisements are telecast என்பதே மேலும் பொருத்தமாக இருக்கும்.

Practice, practise ஆகிய இரு வார்த்தைகளுக்கு இடையே குழப்பம் உண்டாவதுண்டு. Practice என்பது noun. அதாவது பெயர்ச்சொல். Practise என்பது ஒரு செயல்பாடு. அதாவது verb.
Practice என்பது பயிற்சி. Practise என்பது பயிற்சி செய்வது. எனவே லலிதா It is not a good practice என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x