Published : 29 Jan 2020 09:47 AM
Last Updated : 29 Jan 2020 09:47 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?

ஜலதோஷமா, காய்ச்சலா?

ஜி.எஸ்.எஸ்.

மருத்துவரை எதிர்பார்த்து மருத்துவமனையில் இந்துமதியும், விசாலாட்சியும் காத்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

Indumathi – May I know what for you have come here?
Visalakshi – Continuously water is coming from my nose.
Indumathi – For how many days?
Visalakshi – Five days. What is the problem with you?
Indumathi – I have too much fever.
Visalakshi – Take care. Virus is spreading.
Indumathi – Yes. That is why I have come here to meet doctor.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள். மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம்.

பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

விசாலாட்சி தொடர்ந்து தன் மூக்கில் நீர் வடிந்து கொண்டிருக்கிறது என்கிறாள். இதை I have a running nose என்று கூறலாம். Continuously water is coming என்பது சரியல்ல.

எவ்வளவு நாட்களாக இந்த ஜலதோஷம் என்பதைக் கேட்க for how many days என்கிறாள் இந்துமதி. For the past how many days என்று கேள்வியைத் தொடங்குவது மேலும் பொருத்தமானது.

உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதைக் குறிக்க What is the problem with you? எனக் கேட்கிறாள் விசாலாட்சி. அவள் கேட்க நினைப்பது உடல் பிரச்சினை குறித்துதான். எனவே what is your ailment என்று அவள் கேட்பது பொருத்தமாக இருக்கும்.

இந்துமதி I have too much fever என்கிறாள். இதற்குப் பதிலாக I have high fever என்று குறிப்பிட்டிருக்கலாம். I have come to meet doctor என்பதைவிட I have come to consult the doctor என்பது மேலும் பொருத்தமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x