Published : 28 Jan 2020 09:32 AM
Last Updated : 28 Jan 2020 09:32 AM

அறிந்ததும் அறியாததும்: எங்கே நடந்தது?

நான்கு வகையான சேதிகளை prepositions நமக்கு உணர்த்தும் என்று பார்த்தோம். அதில் முதல் வகை, ஒரு சம்பவம் நிகழும் இடத்தை குறித்து பேசுபவை. அதை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்! உதாரணத்துக்கு,

1. Some girls are playing in the playground.

சிறுமிகள் சிலர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்? மைதானத்தில் ஆக, ‘in’ என்பது இந்த வாக்கியத்தில் preposition ஆகும்.

2. The boys are standing under the tree.

சிறுவர்கள் மரத்துக்கு அடியில் நின்று கொண்டிருக்கிறார்கள். எங்கே நின்றுகொண்டிருக் கிறார்கள்? மரத்துக்கு அடியில் ஆக, அடியில் என்பதை ஆங்கிலத்தில் குறிக்கும் ‘under’ இந்த வாக்கியத்தில் preposition ஆகும்.

3. Rekha aunty lives in an apartment below ours.

ரேகா அத்தை நம் வீட்டுக்குக் கீழே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். எங்கே வசித்து வருகிறார்? நம் வீட்டுக்கு, ‘கீழே’ ‘உள்ள’... ஆக, இங்கு ‘in’, ‘below’ ஆகிய இரண்டு சொற்களும் இடத்தை குறிப்பதால் அவை இரண்டுமே இந்த வாக்கியத்தில் prepositions. இடத்தை குறிக்கும் மேலும் பல prepositions உள்ளன. அவற்றை குறித்தும் prepositions-ன் மற்ற வகைகள் குறித்தும் நாளை விரிவாக பார்க்கலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x