Published : 27 Jan 2020 11:17 AM
Last Updated : 27 Jan 2020 11:17 AM
'3,000-year-old Egyptian mummy's voice recreated'
London,
In a first, researchers have recreated the sound produced by a 3,000-year-old mummified Egyptian priest by 3D printing his intact vocal tracts, an advance that may lead to new ways of listening to the vocalisations of ancient humans.
The researchers, including those from the University of London in the UK, believe the Egyptian mummy, Nesyamun, lived during the politically volatile reign of pharaoh Ramses XI between 1099 and 1069 BC, over 3000 years ago.
According to the study, published in the journal Scientific Reports, Nesyamun worked as a scribe and priest at the state temple of Karnak in Thebes -- modern day Luxor -- and his voice was an essential part of his ritual duties which involved spoken as well as sung elements.
The scientists used an X-ray device called a computed tomography (CT) scan to perform a detailed analysis of Nesyamun's intact mouth and throat.
They then recreated the mummy's voice box, or larynx, using 3D printing -- a process which builds a three-dimensional object from a computer-aided design model, usually by adding material layer by layer.
When the researchers used the 3D printed setup with an artificial larynx commonly used in speech synthesis, they could reproduce a single sound, falling between the vowels in the English words 'bed' and 'bad', the study said.
According to the researchers, their proof-of-concept recreation of a vocal tract preserved over three millennia may pave the way for new ways of presenting the past to the public.
- PTI
3000 ஆண்டுகள் பழமையான மம்மியின் குரலை கேட்க வேண்டுமா?
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மியின் குரல்வளையை செயற்கையாக உருவாக்கி, அதற்கு குரல் கொடுக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நேசயாமம் என்ற மதகுருவின் மம்மி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் கி.மு. 1099-ல் இருந்து 1069 வரை வாழ்ந்தார் என்பதையும், அப்போது 11-ம் பரோ ராம்சஸ் மன்னரின் நிலையற்ற ஆட்சியில் எகிப்து நாடு இருந்ததையும் இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அன்று பல மந்திரங்களை ஓதிய நேசயாமம் மதகுருவின் குரல் மிகவும் வலிமையானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் அவரது குரல் வளையை முப்பரிமாண அச்சு தொழில் நுட்பத்தின் மூலம் அளவு எடுத்து, செயற்கைக் குரல் வளையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
கம்ப்யூடட் டோமோகிராஃபி என்ற ஊடுகதிர் கருவியை பயன்படுத்தி நேசயாமமின் வாய், தொண்டையை முதலில் ஆய்வு செய்திருக்கிறார்கள். பிறகு முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தின் மூலம் அவருடைய குரல் வளையை செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள். இந்த குரல்வளை மூலம் சில வார்த்தைகளை ஒலிக்க வைத்து, அவரது குரல் வளம் எப்படி இருந்திருக்கும் என்று கண்டறியும் சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக, ஒரு மம்மிக்கு இந்த தொழில்நுட்பம் மூலம் குரலை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. அதாவது, இந்த மதகுருவின் தொண்டைப் பகுதியில் இன்னமும் மென்மையான திசுக்களும், தொண்டைப் பகுதியும் இருப்பதால்தான் இந்த முயற்சியை மேற்கொள்ள முடிகிறது, வெறும் எலும்புக்கூடாக இருந்தால் இந்த முயற்சியை மேற்கொள்வது என்பது இயலாத காரியம்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT