Published : 27 Jan 2020 11:09 AM
Last Updated : 27 Jan 2020 11:09 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? பதில் வேடிக்கையா இருக்கு!

ஜி.எஸ்.எஸ்.

பள்ளித் தோழர்களான அசோக்கும், பசுபதியும் நடத்திய உரையாடலில் இருந்து ஒரு பகுதி இது.

Ashok - Hi Pasupathy, how are you?
Pasupathi - how are you.
Ashok - What brakefast you had today?
Pasupathi - I have three dosas.
Ashok - I daily take five dosas. Our dosas will be smaller.
Pasupathi – Do you take chatni or sambar?
Ashok - I take both together.
Pasupathi – Your answer is fun.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள். மேற்படி உரையாடலிலுள்ள தவறு களைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது.

என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். காலை உணவை ப்ரேக்ஃபாஸ்ட் என்பார்கள். ஆனால், அதை ஆங்கிலத்தில் breakfast என்றுதான் குறிப்பிடுவார்கள்.

Brakefast என்பது தவறு. காலையில் மூன்று தோசைகள் சாப்பிட்டேன் என்பதைக் குறிக்க I have three dosas என்கிறான் பசுபதி. அவன் கூறியதற்குப் பொருள் என்னிடம் மூன்று தோசைகள் உள்ளன என்பதாகும். அசோக் “I daily take five dosas” என்கிறான். Have அல்லது Take என்பதற்குப் பதிலாக eat என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம்.

சட்னி என்பதை ஆங்கிலத்தில் chutney என்பார்கள். அசோக்கும் ஓரிடத்தில் Both together என்கிறான். I take both என்று மட்டும் கூறியிருந்தால் போதும். ஒருவேளை சட்னி, சாம்பார் இரண்டையும் கலந்து தோசைக்குத் தொட்டுக் கொள்வேன் என்ற பொருளில் அவன் கூறியிருந்தால் அது சரியே. Your answer is fun என்பதற்குப் பதிலாக your answer is funny என்று குறிப்பிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x