Published : 23 Jan 2020 12:16 PM
Last Updated : 23 Jan 2020 12:16 PM

மொழிபெயர்ப்பு: அறிவியலுக்கு தரும் முக்கியத்துவத்தைக் கலை படிப்புகளுக்கும் தரவேண்டும்

குவகாத்தி

Strike balance between science and humanities subjects, Assam guv tells varsity teachers

Guwahati

Technology and its applications are changing lives every moment with space travel no longer a distant dream or artificial intelligence and robotics being no longer science fiction, Assam Governor Jagdish Mukhi on Tuesday said in a programme to celebrate the 27th foundation day of Assam University at Silchar.

"This development should not divert our attention from basic science research and the University should motivate its students into basic science research and make fundamental changes in the lives of the people living in the state," he said.

Mukhi also urged upon the university faculty members to strike a proper balance between science and humanities."The purpose of education should make an individual a well-rounded personality and a goodhuman being. The university must help the students to imbibe interests in a range of subjects," he said.
For instance, a good scientist will become a better scientist with some knowledge of social sciences and liberal arts and similarly, a student of humanities will gain from an appreciation of science, Mukhi pointed out.

Referring to New Education Policy of 2019which emphasizes that higher education institutions should have the "autonomy to innovate" on matters of curriculum and assessment, the governor said all institutions of higher learning should imbibe the ideals laid down in the new educational policy.
The universities should also fund student clubs and activities and set up support centres for students from disadvantaged backgrounds, he added.

- PTI

அறிவியலுக்கு தரும் முக்கியத்துவத்தைக் கலை படிப்புகளுக்கும் தரவேண்டும்

தொழில்நுட்பமும் அதன் பயன்பாடும் நம்முடைய அன்றாட வாழ்க்கையை நொடிக்கு நொடி மாற்றிக் கொண்டிருக்கின்றன. விண்வெளி பயணம்கூட இனி தொலைதூர கனவில்லை. செயற்கை நுண்ணறிவும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பமும்கூட இனி வெறும் அறிவியல் புனைகதை அல்ல என்று அசாம் ஆளுநர் ஜகதீஷ் முகிசில்சாரில் உள்ள அசாம் பல்கலைக்கழகத்தின் 27-வது ஆண்டு விழாவில் பேசினார்.

“இத்தகைய அதிவேக வளர்ச்சியானது அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் நாம் செலுத்த வேண்டிய கவனத்தை திசை திருப்பிவிடக் கூடாது. அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபடப் பல்கலைக்கழகம் ஊக்குவிக்க வேண்டும். அதன் வழியாக இம்மாநில மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் நிகழ வேண்டும்” என்று அவர் கூறினார். குறிப்பாக, அறிவியலுக்கும் கலைக்கும் இடையில் சமநிலையை கொண்டுவரும் முயற்சியை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“தனிநபரை முழுமையான ஆளுமையாகவும் நல்ல மனிதராகவும் உருவாக்குவதே கல்வியின் நோக்கமாகும். மாணவர்களுக்கு பலவகைப்பட்ட பாடங்களில் ஆர்வம் ஏற்படப் பல்கலைக்கழகம் உதவ வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். உதாரணத்துக்கு, ஒரு நல்ல விஞ்ஞானிக்கு சமூக அறிவியல் குறித்தும் தாராள கலைத் துறைகள் குறித்தும் அறிவு இருக்குமானால் அவர் சிறந்த விஞ்ஞானியாக உருவெடுப்பார். அதே போல கலை படிப்புகளைப் படிக்கும் ஒருமாணவரால் அறிவியலையும் கற்றறிய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய கல்விக் கொள்கை 2019-ல் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது போல பாடத்திட்டம், மதிப்பீட்டு முறையில் புதுமையைப் புகுத்தும் அதிகாரம் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் புதிய கல்விக் கொள்கையின் சாராம்சத்தைப் பின்பற்ற வேண்டும்.

மாணவர் சங்கங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளுக்கு பல்கலைக்கழகங்கள் நிதி அளிக்க வேண்டும், பின்தங்கிய சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கான ஆதரவு மையங்கள் நிறுவப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x