Published : 23 Jan 2020 12:10 PM
Last Updated : 23 Jan 2020 12:10 PM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? செய்தித்தாளை எவ்வளவு நேரம் படிப்பாய்?

ஜி.எஸ்.எஸ்.

நண்பன் டேவிடின் வீட்டுக்கு வருகை தந்திருக்கிறான் சுகுமார். அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

David – Where is the newspaper?
Sukumar – It is here. Why do you want to read the newspaper?
David – To know about the latest newses.
Sukumar – How lengthy you will read newspaper daily?
David – May be for thirty minutes.
Sukumar – Will you read sport page?
David – Yes. I like Kabadi and read all news related to Kabadi.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்
படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள். மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம்.

அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். News என்பதின் ப​ன்மையும் newsதான். ஆங்கிலத்தைப் பொருத்தவரை செய்தி, செய்திகள் ஆகிய இரு வார்த்தைகளையும் news என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகிறோம்.

தினமும் எவ்வளவு நேரம் செய்தித்தாளைப் படிப்பாய் என்பதைக் கேட்க, how lengthy you will read daily என்று கேட்கிறான் சுகுமார். இது தவறு. How long என்று அவன் கேட்டிருக்க வேண்டும் அல்லது for how many minutes will you be reading newspaper daily என்று கேட்டிருக்கலாம். ஒரு தனி வார்த்தையாக sports என்றுதான் உண்டே தவிர, sport என்று கிடையாது. எனவே sport page என்பதற்குப் பதிலாக sports page என்றுதான் இருந்திருக்க வேண்டும். கபடி என்பது kabaddi (அதாவது ‘d’ என்பது இருமுறை இடம்பெற வேண்டும்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x