Published : 07 Jan 2020 11:23 AM
Last Updated : 07 Jan 2020 11:23 AM

அறிந்ததும் அறியாததும்:  ஒரு ஆப்பிளின் கதை!

கோப்புப்படம்

ஆங்கில இலக்கணத்தில் மிகவும் சுவாரசியமானவை a, an ஆகிய articles எனலாம். A,E, I, O, U ஆகிய Vowels-உடன் தொடங்கும் ஆங்கில சொற்களுக்கு முன்னால் An எழுத வேண்டும் என்பது பொதுவான விதி.

ஆனால், எப்படிப்பட்ட சொற்களுக்கு முன்னால் எழுத வேண்டும், எங்கெல்லாம் a எழுத வேண்டும் என்பது தெரியுமா? இதுவரை தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். இப்போது தெரிந்துகொள்வோம் வாருங்கள் மாணவர்களே!
முதல் விதி - ஒருமை பெர்யசொற்களுக்கு முன்னால் மட்டுமே A, An எழுதலாம்.

A என்ற article-ஐ b,c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z ஆகிய consonants உடன் தொடங்கும் ஒருமை பெயர்ச்சொற்களுக்கு முன்பாக மட்டுமே எழுத வேண்டும்.

உதாரணத்துக்கு, A dress, A boy, a strawberry, a tree. Vowels மட்டுமின்றி vowel ஒலிக் கொண்ட (உதாரணம்: hour, honest) ஒருமை பெயர்ச்சொற்களுக்கு முன்னால் மட்டுமே an எழுதலாம். உதாரணத்துக்கு, An apple, an elephant, An ice cream, An honest girl, An umbrella.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x