Published : 02 Dec 2019 09:40 AM
Last Updated : 02 Dec 2019 09:40 AM

மொழிபெயர்ப்பு: ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பாலின பாகுபாடற்ற கழிப்பிடம் 

கொல்கத்தா

JU considering to set up gender-neutral toilets in campus

Kolkata

Nov 29 (PTI)

The Jadavpur University is considering a proposal by the students' union to set up gender-neutral toilets in the campus, varsity authorities said on Friday.

The administration has received a proposal for setting up two gender-neutral toilets in the campus and is considering it, a senior JU official said.

"The proposal is yet to be placed before the panel that looks after developmental works in the campus. We are considering setting up not only gender-neutral toilets but also differently-abled-friendly ones," a professor said.

He said the university has an inclusive culture and that should get reflected in its amenities.
Schoolteacher Suchitra Dey, who was Hiranmay Dey before undergoing sex reassignment surgery in 2017, said gender-neutral toilets would be very helpful.

Dey said she faced predicament while using toilets at JU while studying post-graduation in English there before under going surgery but got a lot of support from the faculty.

A student of International Relations Department said that the demand for gender-neutral toilets has been long- pending and has the support of all the students.-PTI

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பாலின பாகுபாடற்ற கழிப்பிடம்

கொல்கத்தா:

ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவ சங்கத்தினரின் கோரிக்கைக்கு இணங்க பல்கலைக்கழக வளாகத்தில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பிட வசதி செய்து தர பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கென இரண்டு கழிப்பிடங்களைக் கட்டித்தரும்படி தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“பல்கலைக்கழக வளாகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவரும் குழுவின் பார்வைக்கு இந்த திட்டம் இன்னும் கொண்டு செல்லப்படவில்லை. இந்நிலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகளும் சுலபமாக பயன்படுத்தும் வகையிலான கழிப்பிடங்களை உருவாக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் பேராசிரியர் ஒருவர். அனைவரையும் உள்ளடக்கிய பண்பாட்டுச் சூழலை ஜாதவ்பூர்பல்கலைக்கழகம் கொண்டிருக்கிறது. அத்தகைய இணக்கமான சூழல்இங்குள்ள வசதிகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றார் அவர்.

ஹிரன்மே டேய் என்ற ஆண் 2017-ல் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பள்ளி ஆசிரியை சுசித்ரா டேய்யாக மாறினார். அவர் இது குறித்து கூறுகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான கழிப்பிட வசதி மிகவும் பயனுள்ளது என்றார். இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இவர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்
படிப்பு படித்து வந்த காலத்தில் தான்பாலின மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்துகொள்ளாததால் அப்போது கழிப்பிடத்துக்குச் செல்லும்போது மிகுந்த இக்கட்டுக்கு ஆளானதாகக் கூறுகிறார். அதே நேரம், அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் தனக்கு மிகுந்த ஆதரவு நல்கியதாகக் கூறுகிறார்.

இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர்வதேச உறவுகள் துறை மாணவர் ஒருவர் இது குறித்துக் கூறுகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான கழிப்பிட வசதி குறித்த கோரிக்கையானது நெடுநாள் நிலுவையில் உள்ளது. அனைத்து மாணவர்களின் ஆதரவும் இதற்கு உள்ளது என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x