Published : 02 Dec 2019 09:37 AM
Last Updated : 02 Dec 2019 09:37 AM
நேரெதிரான விஷயங்களைக் கூட இணைக்க ‘Linking words’ உதவும் என்று பார்த்தோம். எதிரானவற்றையே இணைக்க உதவும் என்றால் ஒத்துப்போகக்கூடிய கருத்துகளை இணைக்கவும் நிச்சயம் பயன்படும் அல்லவா!
முதலில் இடம்பெற்ற வாக்கியத்தில் சொல்லப்பட்ட செய்திக்கு வலு சேர்க்கும் விதமாக அடுத்த வாக்கியத்தில் இடம்பெறும் ‘Linking words’-ஐ தெரிந்து கொள்வோம் வாருங்கள்!
Likewise (அவ்வாறே)
உதாரணத்துக்கு, It is not safe to give your phone number to every one who asks for it. Likewise, it is not safe to go out with everyone who invites you.
உன்னுடைய தொலைப்பேசி எண்ணைக் கேட்பவர்களிடம் எல்லாம் கொடுப்பது பாதுகாப்பானதல்ல. அவ்வாறே உன்னை அழைப்பவர்களோடு எல்லாம் வெளியே செல்வதும் பாதுகாப்பானதல்ல.
Similarly (இதேபோல)
You are not allowed to use your mobile phone here. Similarly, you have to switch it off when you’re in the library.
இங்கு நீ அலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. இதேபோல நூலகத்திலும் அலைபேசியை ஆஃப் செய்துவிட
வேண்டும்.
Corresponding (அதற்கேற்ப/ அதற்கு இணையாக)
She is an excellent photographer. Correspondingly, her paintings are works of art.
அவளொரு அற்புதமான ஒளிப்படக் கலைஞர். அதற்கு இணையாக அவள் தீட்டிய ஓவியங்களும் கலை நயம் மிக்கவை.
In the same way (அதேபோல)
Cutting down on sugar will help you lose weight. In the same way, doing more exercise will help you get rid of a few kilos.
சர்க்கரை சாப்பிடுவதை குறைத்து கொள்வது எடை குறைப்புக்கு உதவும். அதேபோல நிறைய உடற்பயிற்சி செய்வதும் சில கிலோ எடையைக் குறைக்க உதவும்.
Also (மேலும்)
I want to talk to you when I come to your home. Also, I want to meet your parents.
உன்னுடைய வீட்டுக்கு வரும்போது நான் உன்னுடன் பேச வேண்டும். மேலும் உன்னுடைய பெற்றோரையும் சந்திக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT