Published : 29 Nov 2019 11:52 AM
Last Updated : 29 Nov 2019 11:52 AM
New app to aid government schools in MP
Bhopal,
Nov 27 (PTI) The Madhya Pradesh education department announced the launch of an app for teachers and students in government schools, an official said on Wednesday.
The app, inspired by South Korean model of education, is being introduced in 13 government schools on a pilot basis, he added.
"Teachers can conduct tests and ask questions through the app and students can respond on it," minister of school education Prabhuram Chaudhary said, adding that the app has been introduced for students upto class 8 in 13 schools of Bhopal and Raisen districts.
If successful, the education department will expand its use at government schools in other parts of the state as well, he said.
The state government had also organised exposure tours for teachers and education department officials to South Korea, New Delhi and Noida where they could observe and assess the education system, Chaudhary said.
"These tours were organised to encourage innovations and best practices in the field," he said. The department also plans to introduce special training for girls who wish to join the police and paramilitary forces, an official from the school education department said.
At least 50 girls will be selected for this special training from each district, the officials said.
- PTI
மத்திய பிரதேச அரசு பள்ளிகளுக்கு உதவ புதிய செயலி அறிமுகம்
போபால்
மத்திய பிரதேச அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய செயலி ஒன்றை வெளியிடவிருப்பதாக மத்திய பிரதேச கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த செயலி தென் கொரியாவின் கல்வி முறையை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சோதனை முயற்சியாக இந்த செயலி ஏற்கெனவே மாநிலத்தின் 13 அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
போபால் மற்றும் ரெய்சன் மாவட்டங்களைச் சேர்ந்த 13 பள்ளிகளைச் சேர்ந்த 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது என்று மாநில கல்வி அமைச்சர் பிரபுராம் சவுத்ரி தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “இந்த செயலி வழியாக ஆசிரியர்களால் தேர்வு நடத்த முடியும். மாணவர்களும் செயலி மூலமாகவே பதிலளிக்க முடியும். இந்த சோதனை வெற்றிபெற்றால், மாநிலத்தைச் சேர்ந்த இதர பகுதிகளிலும் செயலியை கல்வித் துறை கொண்டுசெல்லும்” என்றார்.
கல்வி குறித்த பரந்துவிரிந்த அனுபவமும் புரிதலும் ஆசிரியர்களுக்கும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் கிடைக்க அவர்களுக்குச் சுற்றுப்பயணங்களை மாநில அரசு ஏற்பாடு செய்துவருகிறது. இதன்படி தென்கொரியா, புதுடெல்லி மற்றும் நொய்டா ஆகிய இடங்களின் கல்வி அமைப்பைக் கவனிக்கவும் மதிப்பீடு செய்யவும் அங்கெல்லாம் ஆசிரியர்களும் கல்வித் துறை அதிகாரிகளும் அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள்.
“கல்வித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும் சிறந்த பயிற்சி முறைகளையும் ஊக்காப்படுத்தவே இந்த சுற்றுப்பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன” என்றும் பிரபுராம் சவுத்ரி தெரிவித்தார்.
காவல் துறையிலும் துணை ராணுவத்திலும் பணியாற்ற விரும்பும் மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கவும் கல்வித் துறை திட்டமிடப்பட்டிருப்பதாக பள்ளி கல்வி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT