Published : 27 Nov 2019 10:42 AM
Last Updated : 27 Nov 2019 10:42 AM

ஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்? - தவறுதலாக கேட்டிருப்பாய்!

ஜி.எஸ்.எஸ்.

மல்லிகா கோபமாக வீட்டுக்கு வருகிறாள். அவளது அண்ணன் பூபாலன் இதைக் கண்டு அவளுடன் பேசுகிறார். அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி இது.

Bhoopalan – What happened?
Malliga – I will not talk to Banu from now.
Bhoopalan – Why?
Malliga – I am afraid for her. She says she eats snakes daily.
Bhoopalan – What! She is coming from China? Why should she eat snakes?
Malliga – I don’t know. She says her whole family eats snakes during evenings.
Bhoopalan – (Laughs) I now understand. You might have herd her wrongly.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

I will not talk to Banu என்று சொல்லக் கூடாது. I will not talk with Banu என்பதே சரி.
ஒருவரைப் பார்த்து பயம் ஏற்பட்டால் afraid of என்றுதான் குறிப்பிட வேண்டும். எனவே I am afraid for her என்பதற்குப் பதிலாக I am afraid of her என்றுதான் மல்லிகா சொல்லி இருக்க வேண்டும்.

She is coming from China என்பது கேள்வி அல்ல. அது ஒரு வாக்கியம். அதற்கு பதிலாக Is she coming from China? என்று கேட்கலாம். சொல்லப்போனால் is she a Chinese? என்ற பூபாலன் கேட்டிருந்தால் அது மேலும் சரியானது.

இந்த உரையாடலின் வேடிக்கையான பின்னணி இதுதான். ஆங்கிலத்தில் snacks என்றால் நொறுக்குத் தீனி – பிஸ்கெட், ஓமப்பொடி போல. இதைத்தான் பானுவின் குடும்பத்தினர் தினமும் சாப்பிடுகிறார்கள். ஆனால், அவர்கள் பாம்புகளை (snakes) சாப்பிடுவதாக மல்லிகா தவறாக நினைததுக் கொண்டிருக்கிறாள்.

பூபாலன் herd என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறார். Heard என்பது கேட்பது தொடர்பானது. I heard you என்றால் (நீ பேசியதை) நான் கேட்டுவிட்டேன் என்று பொருள். Herd என்பது மந்தையைக் குறிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x