Published : 25 Nov 2019 11:01 AM
Last Updated : 25 Nov 2019 11:01 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?: எனக்கே வெற்றி கிட்டியது!

கல்லூரி மாணவி புனிதாவுக்கும் பள்ளி மாணவி ரோஸ்மேரிக்கும் இடையே நடந்த உரையாடலின் ஒரு பகுதி இது.

Punitha – How are you?

Rosemary – Fine. I feel grate.

Punitha – Why?

Rosemary – I came first in slow walking race.

Punitha – (smiles) Actually you should be sad about it.

Rosemary – Why? I was the winner.

Punitha – How many pupil participated in the competition?

Rosemary – Twelve. And Malathy was the twelth.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

Great என்றால் பிரமாதம் என்று பொருள் கொள்ளலாம். I feel great என்றால் நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன் என்று பொருள். ஆனால் grate என்ற வார்த்தை நன்றியோடு தொடர்பு கொண்டது. I am grateful என்றால் நான் நன்றி உணர்வு கொண்டவன் என்று பொருள்.

I came first in slow walking race என்று ரோஸ்மேரி கூறுகிறாள். இது குழப்பமான பொருளைத் தருகிறது. மெதுவாக நடக்கும் போட்டியில் கடைசியாக வருபவர்தான் வெற்றியாளர். எனவே குழப்பத்தைத் தவிர்க்க I was the winner in slow walking race என்று தொடக்கத்திலேயே ரோஸ்மேரி சொல்லி இருக்கலாம்.

Pupil என்றால் மாணவர். இதன் பன்மை pupils. People என்றால் அது மக்களைக் குறிக்கிறது. இது எப்போதுமே பன்மைப் பொருளைத்தான் குறிக்கும். Peoples என்ற ஒரு வார்த்தை கிடையாது. எனவே புனிதவதி How many pupils participated என்றோ, how many people participated என்றோ கேட்டிருக்க வேண்டும்.

பன்னிரெண்டாவது என்பதற்கான ஆங்கில சொல்லை கூறும்போது ‘ட்வெல்த்’ என்று கூறுவோம். ஆனால், எழுதும்போது அதில் ‘f’ என்ற எழுத்தும் இடம் பெற வேண்டும். அதாவது twelfth என்று எழுத வேண்டும். Twelth என்பது தவறு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x