Published : 22 Nov 2019 08:39 AM
Last Updated : 22 Nov 2019 08:39 AM

மொழிபெயர்ப்பு: மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் செயலி அறிமுகம்

Mobile app to help Assam students improve reading skills

Hailakandi (Assam):

The Assam government has installed a voice-based app on the mobile phones of over 100 teachers in southern Hailakandi district to enable them to assist students in improving their reading skills.
'Bolo App' is designed to encourage students to read aloud, giving them feedback even when it is offline, said Additional Deputy Commissioner (in-charge education), R K Dam.

"The app listens to what children read, encourages them when they do well and helps them out when they struggle, just like a real tutor. Children can also play word games and earn in-app awards, helping reading become fun and a daily habit," Dam said.

District Deputy Commissioner Keerthi Jalli had last week launched the app at a programme, in which over 230 educational volunteers took part for improving their Bengali and Mathematics skills, he said.
Programme leader Sadasivam said the progress of the children can be tracked in the app.
- PTI

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் செயலி அறிமுகம்

ஹைலகண்டி (அசாம்)

அசாம் மாநிலத்தின் ஹைலகண்டி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் அலைப்பேசியில் குரல்வழி செயலி ஒன்றை அசாம் அரசு நிறுவி இருக்கிறது. இதன்மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ஆசிரியர்களால் வழிகாட்ட முடியும்.

வாய்விட்டு சத்தமாக வாசித்து பழக மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் ‘போலோ ஆப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இணைய வசதி இல்லாதபோதும் இதைப் பயன்படுத்தலாம். அப்போதும் இந்த செயலியால் மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும் என்று கல்வி கூடுதல் துணை ஆணையர் பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.தாம் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், “குழந்தைகள் எதை வாசிக்கிறார்கள் என்பதை உற்றுக் கவனித்து, அவர்கள் சிறப்பாக வாசிக்கும்போது அவர்களை உற்சாகமூட்டி, தடுமாறும்போது அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் அளித்து நிஜமான பயிற்றுநர் போலவே இந்த செயலி செயல்படும். வார்த்தை விளையாட்டுகளையும் இதில் குழந்தைகள் விளையாடலாம். விளையாடியபடியே செயலி தரும் விருதுகளையும் வெல்லலாம். இப்படி வாசிப்பை வேடிக்கையாகவும் அன்றாட வாடிக்கையாகவும் மாற்றக்கூடிய வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.

கடந்த வாரம் ஹைலகண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்த செயலியை மாவட்ட துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி வெளியிட்டார். அப்போது கணிதத் திறனையும் வங்காள மொழி ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள 230 கல்வி தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த செயலியின் வழியாகவே குழந்தைகளின் முன்னேற்றத்தையும் பின்தொடரலாம் என்று திட்டத் தலைவர் சதாசிவம் தெரிவித்தார்.-பிடிசி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x