Published : 21 Nov 2019 09:51 AM
Last Updated : 21 Nov 2019 09:51 AM

மொழிபெயர்ப்பு: உலகளாவிய ஒலி மாசுபாட்டுக்குக் காரணம் மனிதர்களே!

Manmade noise a 'major global pollutant': study

Paris:

It is well known that human hubbub can have a negative impact on some animals, but a new study says the noise we make should be treated as a “major global pollutant”.

“We found that noise affects many species of amphibians, arthropods, birds, fish, mammals, molluscs and reptilians,” scientists at Queen's University Belfast said in the Royal Society's Biology Letters.

Human noise pervades the environment, from vehicles and industry in dense urban centres, to planes flying overhead, to ocean going vessels whose propellor is thought to interfere with whale sonar communications and may be implicated in mass beaching as the disorientated animals lose their sense of direction.

“The interesting finding is that the species included range from little insects to large marine mammals such as whales. We did not expect to find a response to noise across all animal species” Kunc who is one among the researchers told AFP.

Manmade noise, for example, has been shown to interfere with the sonar detection systems that bats use to find their insect prey, making it more difficult for the flying mammals to catch insects.

But that may be good news for the bugs: “Potential prey may benefit directly from anthropogenic noise,” the paper said.

Kunc cautioned, however, that the big picture is still one of serious disruption across the natural environment.

- AFP

உலகளாவிய ஒலி மாசுபாட்டுக்குக் காரணம் மனிதர்களே!

பாரிஸ்:

மனிதர்கள் ஏற்படுத்தும் இரைச்சல் விலங்குகளை மோசமாகப் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நாம் உண்டாக்கும் சத்தத்தை, ‘அதிகளவிலான உலகளாவிய மாசுபாடு’ என்றே கருத வேண்டும் என்று புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டி இருக்கிறது.

“நில நீர் வாழ் உயிரினங்களை, பூச்சிகளை, பறவைகளை, மீன்களை, பாலூட்டிகளை, நத்தைகளை, ஊர்வன உள்ளிட்ட பலவகைப்பட்ட உயிரினங்களை இரைச்சல் பாதிக்கும் என்பதை கண்டறிந்தோம்” என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் பெல்ஃபாஸ்ட் பகுதியில் உள்ள குவீன்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராயல் சொசைட்டியின் ‘பயாலஜி லெட்டர்ஸ்’ ஆய்விதழில் இந்த ஆய்வு வெளிவந்துள்ளது.

மனித இரைச்சல் சுற்றுச்சூழல் முழுவதும் பரவி பாதிப்பு ஏற்படுத்துகிறது. வாகனங்களில் தொடங்கி மக்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள், தலைக்கு மேல் பறக்கும் விமானங்கள் என்பதாக அது நீண்டுகொண்டே போகிறது. அதிலும் கடலில் செலுத்தப்படும் கப்பல்கள் ஏற்படுத்தும் ஒலியால், திமிங்கிலம் உள்ளிட்ட பல கடல்வாழ் உயிரினங்களின் ஒலி தொடர்புக்கு இடையூறு ஏற்பட்டு அவை திக்குத் தெரியாமல் குழம்பிப் போகின்றன.

“ ஒலி மாசுபாட்டினால் சின்னஞ்சிறிய பூச்சிகள் முதல் திமிங்கிலம் போன்ற மிகப் பெரிய பாலூட்டிகள் வரை பாதிக்
கப்படுகின்றன என்பதுதான் இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கியத் தகவல். அத்தனை விலங்கினங்களின் மீதும் இரைச்சல் தாக்கம் செலுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான குன்க்.

ஒலியை அடிப்படையாக வைத்து இரையைப் பிடித்துத் தின்னும் வெளவால்களுக்கு மனிதர்களால் உண்டாகும் சத்தம் இடையூறு ஏற்படுத்துகிறது. வெளவால் மட்டுமல்ல பறக்கும் பாலூட்டிகள் பூச்சிகளைப் பிடிப்பதற்கு இது இடைஞ்சல் கொடுக்கிறது. ஆனால், இதே விஷயம் மறுபுறம் வண்டுகளுக்கு நற்செய்தியாகமாறுகிறது. ஆனால், ஒட்டுமொத்தத்தில் மனிதர்கள் உண்டாகும் இரைச்சல் என்பது இயற்கை சூழலுக்கு மிகப் பெரிய இடையூறாக உருவெடுத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர் குன்க் எச்சரிக்கிறார்.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x