Published : 21 Nov 2019 09:42 AM
Last Updated : 21 Nov 2019 09:42 AM
ஒரு சொல்லை வேறு சொல்லாக மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை Prefix மற்றும் Suffix எழுத்துக்கள். இவற்றில் பல வகைகள் இருப்பதைப்பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், இன்று Verb (வினைச்சொல்)Suffix-களை அறிந்து கொள்வோமா!
Verb Suffixes – ate, en, ify, fy, ise, ize
‘Ate’ என்றால் சாப்பிட்டுவிட்டதைக் குறிப்பதுதானே என்கிறீர்களா? தனியாக எழுதப்படும்போதுதான் அந்த அர்த்தம். சொற்களுக்குப் பின்னால் ate என்றெழுதினால் ‘வேறொன்றாக மாறுவது’ என்ற பொருள்படும்.
இதோ சில உதாரணங்கள்,Create, Collaborate, Mediate.
Creation (படைப்பு) என்பதன் வினைச்சொல் create (படைத்தல்). இங்கு ate என்ற suffix தான் அந்த பொருளைத் தருகிறது.
அதே போல collaboration,mediation ஆகியவற்றின் வினைச்சொற்கள்தாம் மேலே குறிப்பிடப்பட்டவை.
அடுத்து, ‘en’ என்ற Verb Suffix-வுட்ன் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள், Sharpen, Strengthen, Loosen.
ify, fy ஆகிய Verb Suffixes-வுடன் அவ்வப்போது எழுதப்படும் சொற்கள், Justify, Simplify, Magnify, Satisfy.
ise, ize ஆகிய Verb Suffixes-வுடன் வலம்வரும் சில சொற்கள், Publicise, Synthesise, Hypnotise
இவற்றை தெரிந்து கொள்வதால் என்னவாக போகிறது என்று தோன்றலாம். இவற்றைக் காரண காரியங்களுடன் புரிந்துகொண்டால் ஆங்கிலத்தில் ஒரு சொல்லை எப்படிச் சூழலுக்கு ஏற்ப பொருத்தி பேசுவது, எழுதுவது என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT