Published : 20 Nov 2019 11:09 AM
Last Updated : 20 Nov 2019 11:09 AM

அறிந்ததும் அறியாததும்: மூழ்காத ‘ship’ எது?

கோப்புப்படம்

சொற்களுக்கு பின்னால் இடம்பெறும் சில எழுத்துகளால் அந்த சொற்களின் வடிவத்தையே மாற்றி அமைக்க முடியும். அத்தகைய எழுத்துக்களுக்குப் பெயர்தான் suffix என்று பார்த்தோம். இவற்றில் சகஜமாகப் பயன்படுத்தப்படும் சில ‘பெயர்ச்சொல் suffix’-களை தெரிந்துகொள்வோம்.

Friend (நண்பர்), Hard (கடினம்), Intern (நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்) ஆகிய சொற்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவற்றுடன் ‘ship’ என்ற Noun Suffix சேரும்போது, Friendship, Hardship, Internship என்ற நிலையைக் குறிக்கும் சொற்கள் பிறக்கும்.

இதே போன்று, அடிக்கடி பயன்படுத்தப்படுபவை sion, tion ஆகிய இரண்டு suffix-கள். Position, Promotion, Cohesion, Tension. இவையும் ‘ship’ என்கிற suffix-ஐ போலவே ஒரு குறிப்பவையாகும்.

அதேபோல, கோட்பாடுகளை, குறிப்பிட்ட துறையை சார்ந்தவர்களை குறிக்கும்போது ism, ist ஆகிய suffix-கள் அதற்குரிய சொற்களுக்கு பின்னால் இணைக்கப்படும்.

உதாரணத்துக்கு,

ism - Buddhism, Hinduism, Communism, Secularism.
ist – Geologist, Scientist, Communist, Theorist.

இதே போன்று ‘வினைச்சொல் suffix’-களும் உள்ளன. அவற்றை அடுத்தடுத்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x