Published : 14 Nov 2019 08:48 AM
Last Updated : 14 Nov 2019 08:48 AM

மொழிபெயர்ப்பு: லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அறுவை சிகிச்சை

Surgery that separated Jaga, Kalia finds place in Limca Book of Records

Bhubaneswar

The successful surgery that separated conjoined twins Jaga and Kalia who were joined at the head, in 2017 has featured in the 2020 edition of the Limca Book of Records as the first such operation in the country.

Led by neurosurgeons Prof Ashok Kumar Mahapatra and Dr Deepak Kumar Gupta, a team of 125 doctors and paramedical staff separated 28-month-old conjoined twins hailing from Odisha's Kandhamal district, at the All India Institute of Medical Sciences (AIIMS) in New Delhi.
"Congratulations! We are happy to inform you that your record is featured in the 2020 edition of Limca Book of Records," an e-mail sent to Deepak kumar by Limca Book of Record Editorial Executive Tresa Benjamin, said.

The complex surgery was conducted in two stages, first on August 28, 2017 and then on October 25, 2017 and has been recorded as the first craniopagus surgery in India in the record book.

Barely 12 or 13 such surgeries had been carried out across the world during the last 33 years.
Jaga and Kalia spent over two years in the AIIMS, New Delhi, before returning to Odisha.
"We should give them two to three years to see how they improved," Mahapatra said. -PTI

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அறுவை சிகிச்சை

புவனேஸ்வர்

ஜகாவும் கலியாவும் தலை ஒட்டியவாறு பிறந்த இரட்டைக் குழந்தைகள். தலை ஒட்டிப் பிறந்த இந்த இரட்டையர்கள் 2017-ல் அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டார்கள். இத்தகைய அறுவை சிகிச்சை நடைபெற்றது நாட்டில் இதுவே முதல் முறை என்ற வகையில் 2020-ம் லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த அறுவை சிகிச்சை இடம்பிடித்திருக்கிறது.

நரம்பியல் மருத்துவர்களான பேராசிரியர் அஷோக் குமார் மகாபத்ரா மற்றும் மருத்துவர் தீபக் குமார் குப்தா ஆகியோரின் தலைமையிலான 125 மருத்துவர்கள் கொண்ட குழு மருத்துவ உதவியாளர்களின் உதவியும் இந்த அறுவை சிகிச்சையை செய்தது. ஒடிசா மாநிலத்தின் கந்தாமல் மாவட்டத்தைச் சேர்ந்த28 மாத குழந்தைகளான ஒட்டிப் பிறந்தஇரட்டையர்களை புது டெல்லியில் உள்ளஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக (ஏய்ம்ஸ்) மருத்துவமனையில் அவர்கள் பிரித்தார்கள்.

“வாழ்த்துகள்! உங்களுடைய சாதனை 2020 லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஒரு மின்னஞ்சலை மருத்துவர் தீபக்குமாருக்கு லிம்கா சாதனை புத்தகத்தின் ஆசிரிய நிர்வாகி த்ரேசா பெஞ்சமின் அனுப்பினார்.

சிக்கலான இந்த அறுவை சிகிச்சை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 2017 ஆகஸ்ட் 28 அன்று முதலா
வதும் 2017 அக்டோபர் 25 அன்று இரண்டாவதும் நடத்தப்பட்டன. இதுவேஇந்தியாவில் நடைபெற்ற தலை ஒட்டிப் பிறந்தவர்களுக்கான அறுவைசிகிச்சை என்கிறது லிம்கா புத்தகம்.

கடந்த 33 ஆண்டுகளில் இத்தகைய அறுவை சிகிச்சைகள் உலகளவில் மிஞ்சி மிஞ்சிப்போனால் 12 அல்லது 13 மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

இந்த சிகிச்சைக்குப் பிறகு ஒடிசாவுக்குத் திரும்புவதற்கு முன்னதாக ஜகாவும் கலியாவும் இரண்டுஆண்டுகள் ஏய்ம்ஸ் மருத்துவ
மனையில் கழித்தார்கள்.

“இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை பொறுத்திருந்தால் தான் அவர்கள் எப்படி முன்னேறி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்” என்றார் மகாபத்ரா. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x