Published : 08 Nov 2019 09:12 AM
Last Updated : 08 Nov 2019 09:12 AM
Washington
Over the last two decades, an international science and technology initiative of the Massachusetts Institute of Technology (MIT) has sent more than 1,000 students, researcher scholars and faculty members to India, a professor of the institute said.
"Working across the breadth of the country, our programme provides students, researchers and faculty with an opportunity to be at the forefront of India's research, technology and innovation activities, while experiencing the country's rich history and culture," MIT Professor of Vision and Computational Neuroscience Pawan Sinha said at an MIT-India event here.
Since 1998, MIT-India has facilitated 1,000+ student internships and research opportunities at India's world-class companies, universities, non-profits and NGOs, Sinha told a Washington DC audience last week.
Organised by the Indian Embassy here, in association with the MIT-Club Washington DC, the event highlighted the activities of MIT-International Science & Technology Initiatives (MISTI)-India Program and discussed on the path forward to achieve greater collaboration with MIT to meet future science and technology goals in India.
"Having an MIT-India intern at the institute also benefits our students who get some exposure of the outside world" said Dr Debasis Das from the Indian Institute of Science. -PTI LKJ
வாஷிங்டன்
கடந்த 20 ஆண்டுகளில் எம்.ஐ.டி. என்றழைக்கப்படும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனமானது தன்னுடைய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 1000 பேரை இந்தியாவுக்குப் படிக்க அனுப்பியுள்ளது. சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கையாக இதை அந்நிறுவனம் செய்துள்ளது.
“இந்தியாவில் நடைபெறும் ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் நாங்கள் அனுப்பி வைத்த மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் முக்கிய பங்கு இருந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் செழுமை மிக்க வரலாற்
றையும் பண்பாட்டையும் எங்கள் மாணவர்கள் அனுபவிக்கும் வாய்ப்பை இதன் மூலம் பெற்றார்கள்” என்று ‘எம்.ஐ.டி. இந்தியா’ என்ற நிகழ்ச்சியில் பேசிய எம்.ஐ.டி.யின் பார்வை மற்றும் கணக்கீட்டு நரம்பியல் துறை பேராசிரியர் பவன் சின்ஹா தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள உலகதர நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ தொண்டுநிறுவனங்களில் இண்டர்ஷிப் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட1998-ல் இருந்து 1000-க்கும் மேற்பட்ட எம்.ஐ.டி. மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எம்.ஐ.டி. கிளப் வாஷிங்டன் டிசியுடன் இணைந்து இந்திய தூதரகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. எம்.ஐ.டி. சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகள் - இந்தியா திட்டத்தின் செயல் பாடுகள் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டன. மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த இந்தியாவின் எதிர்கால குறிக்கோள்களை அடைய அவர்கள் எம்.ஐ.டி.யுடன் இணைந்து பயணிக்க வேண்டிய பாதை குறித்துப் பேசப்பட்டது.
“எம்.ஐ.டி.மாணவர்கள் நமக்கு இன்டர்னாக வருவது நம்முடையமாணவர்களுக்கும் பயனுள்ளதாகஇருக்கிறது. இதன் மூலம் அவர்
களுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைக்கிறது” என்று இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் தெபாசிசிஸ் தாஸ் தெரிவித்தார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT