Published : 07 Nov 2019 08:20 AM
Last Updated : 07 Nov 2019 08:20 AM
Washington
Social media posts from Twitter users could help identify people who are lonely, and provide support for them, according to a study led by an Indian-origin researcher.
Loneliness has been tied to depression, cardiovascular disease and dementia, among other conditions.
Researchers at the University of Pennsylvania School of Medicine in the US determined what topics and themes could be associated with loneliness by accessing content posted by users on Twitter.
By applying linguistic analytic models to tweets, the researchers found users who tweeted about loneliness post significantly more often about mental well-being concerns and things like struggles with relationships, substance use, and insomnia.
The findings, could lead to easier identification of users who are lonely and provide support for them even if they don't explicitly tweet about feeling alone.
"Loneliness can be a slow killer, as some of the medical problems associated with it can take decades to manifest," said the study's lead author Sharath Chandra Guntuku, a research scientist at the University of Pennsylvania.
"If we are able to identify lonely individuals and intervene before the health conditions associated with the themes we found begin to unfold, we have a chance to help those much earlier in their lives" Guntuku said.
The team analysed the accounts of 6,202 Twitter users in Pennsylvania, US who included words like "lonely" or "alone" more than five times over the period reviewed, which stretched from 2012 to 2016. - PTI
வாஷிங்டன்:
ட்விட்டர் பயனாளர்களின் சமூகஊடகப் பதிவுகளை வைத்து தனிமையில் இருக்கும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ முடியும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருக்கிறார்.
மனச்சோர்வு, இருதய நோய்கள், மறதி போன்றவற்றுடன் தொடர் புடையது தனிமை. இந்நிலையில் டிவிட்டர் பயனர்
களின் பதிவுகளில் காணப்படும் எந்தெந்த தலைப்புகள் மற்றும் கருப்பொருள்கள் தனிமையில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்
றன என்பதை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மொழி பகுப்பாய்வு மாதிரிகளை ட்விட்டர் பதிவுகளின் மீதுஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினார்கள். இதன் மூலம், உறவுச் சிக்கல்கள், போதை வஸ்துக்கள் பழக்கம், தூக்கமின்மை உள்ளிட்ட மனநலத்துடனும் தனிமையுடனும் தொடர்புடைய பதிவுகளைப் பிரித்தெடுத்தார்கள்.
தனிமை குறித்து ஒருவர் வெளிப்படையாக பதிவிடவில்லை என்றாலும்கூட தனிமையில் இருக்கும் பயனாளர்களை எளிதில் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ இந்த ஆய்வு முடிவு உதவும்.
“மெல்ல கொல்லக்கூடியது தனிமை. ஏனென்றால் அதனுடன் தொடர்புடைய மருத்துவசிக்கல்கள் வெளிப்படையாக தெரியவரப் பல தசாபதங்கள்கூட ஆகலாம். இந்நிலையில் தனிமையுடன் தொடர்புடைய மருத்துவ சிக்கல்கள் வெளிப்படுவதற்கு முன்பாக தனிமையில் இருக்கும் தனிநபர்களை அடையாளம் கண்டால்அவர்களுக்கு கூடுமானவரை முன்கூட்டியே உதவ முடியும்” என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி ஷரத் சந்திர குண்டுகு தெரிவித்தார்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட குழுவினர், 2012 - 2016 இடையிலான காலகட்டத்தில் ஐந்து முறைக்கு மேல், ‘தனிமை’ அல்லது, ‘தனியாக’ போன்ற சொற்களை தங்களுடைய ட்விட்டர் பதிவுகளில் பதிவிட்ட6, 202 ட்விட்டர் பயனாளர்களின் கணக்குகளை அலசி ஆராய்ந்தனர்.- பிடிஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT