Published : 06 Nov 2019 08:03 AM
Last Updated : 06 Nov 2019 08:03 AM
ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு. அந்த வகையில் ஆங்கில மொழியின் தனித்துவம் அதில் உள்ள மவுன எழுத்துக்கள் எனலாம். ஆங்கில மொழியின் அழகும் அதுவே. அம்மொழியை நமக்குச் சவாலானதாக ஆக்குவதும் அதுவே. அதென்ன மவுன எழுத்துக்கள்?
ஆங்கிலத்தை பொருத்தவரை ஒரு சொல்லில் உள்ள சில எழுத்துக்களை தவிர்த்துவிட்டு அந்த சொல் உச்சரிக்கப்படும். ஆனால், எழுதும்போது அந்த எழுத்துகளையும் சேர்த்துத்தான் அந்தச் சொல்லை எழுத வேண்டியிருக்கும். அவைதான் ‘மவுன எழுத்துக்கள்’.
இந்த வகையிலான சொற்களைச் சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் நீங்களும் ஆங்கிலத்தில் கில்லாடி என்று பெயர் வாங்கி விடலாம் மாணவர்களே!வாருங்கள் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சில மனவு எழுத்துக்களை கொண்ட சொற்களை சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொள்வோம்.
knee - 'நீ’ என்றே உச்சரிக்க வேண்டும்
knife - ‘நைஃப்’ என்றே உச்சரிக்க வேண்டும்.
Island - ‘ஐலாண்ட்’ என்றே உச்சரிக்க வேண்டும்.
Daughter - ‘டாட்டர்’ என்றே உச்சரிக்க வேண்டும்.
Guess - ‘கெஸ்’ என்றே உச்சரிக்க வேண்டும்.
listen - ‘லிசன்’ என்றே உச்சரிக்க வேண்டும்
chalk - ’சாக்’ என்றே உச்சரிக்க வேண்டும்
ஆங்கில எழுத்துக்களில் உள்ள மவுன எழுத்துக்களில் மிகவும் பிரபலமானது ‘K’. சொல்லப்போனால் Q, V, Yஆகிய எழுத்துக்களைத் தவிரஅனைத்து ஆங்கில எழுத்துக்களும் ஏதோ ஒரு இடத்தில்மவுனமாக ஒலிப்பதுண்டு. எப்படி?
- நாளை பார்ப்போம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT