Published : 05 Nov 2019 07:43 AM
Last Updated : 05 Nov 2019 07:43 AM
ஜி. எஸ்.எஸ்
மதன்குமாரின் வீட்டுக்கு அவனது அத்தை மகன் அமுதன் வந்திருக்கிறான். அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.
Amuthan - At which time are you sleeping daily?
Madankumar – Earlier I used to sleep at 11.00 P.M.
Amuthan - My God!Madankumar –But now-a-days I have left the late sleeping habits.
Amuthan - That is a better decision
Madankumar – How many hours do you sleep?
Amuthan - I sleep seven hoursMadankumar – During examination days?
Amuthan - Three hours only
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
பொதுவாக, பழக்கங்களை குறிப்பிடும்போது present tense-ல் குறிப்பிடுவோம் present continuous tense-ல் அல்ல. (I eat என்பது present tense. I am eating என்பது present continuous tense). எனவே Amuthan ‘‘at what time are you sleeping” என்பதற்குப் பதிலாக at what time do you sleep என்று கேட்டிருக்க வேண்டும்.
“Now-a-days I have left the late sleeping habits” என்று மதன்குமார் கூறுகிறான். தமிழில் ஒரு பழக்கத்தை விட்டு விடுவது என்று கூறுவதுண்டு. ஆனால், ஆங்கிலத்தில் அதற்குப் பதிலாக ‘left’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. I have given up the late sleeping habits என்று கூறலாம்.
இரண்டு விஷயங்களை ஒப்பிடும்போதுதான் better என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். எனவே ‘அது ஒரு நல்ல தீர்மானம்’ என்பதை கூறும்போது Amuthan that is a better decision என்பதற்குப் பதிலாக that is a good decision என்று கூறியிருக்க வேண்டும்.
வேறொரு இடத்தில் I sleep seven hours என்று சொல்லும் அமுதன் இறுதியாக daily என்ற வார்த்தையும் சேர்த்துக் கொண்டிருந்தால் தவறில்லை.
தேர்வு நாட்களின்போது மூன்று மணிநேரம் மட்டுமே தூங்குவதை, “threehours only” என்று அமுதன் வெளிப்படுத்துகிறான். மூன்று மணிநேரம் தூங்கினாலே அதிகம் என்பதை அவன் கூற விரும்பினால் ‘hardly three hours” என்று அவன் கூறியிருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT