Published : 04 Nov 2019 09:51 AM
Last Updated : 04 Nov 2019 09:51 AM
Failure is the opportunity to begin again more intelligently – Henry Ford
கூடுதல் புத்திசாலித்தனத்துடன் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புதான் தோல்வி - ஹென்றி ஃபோர்ட்
உலக புகழ்பெற்ற விலை மலிவான சொகுசு காரான ஃபோர்ட் மாடல் டி-யை1903-ல் வடிவமைத்தவர் அமெரிக்கரானஹென்றி ஃபோர்ட். அதை அவர் உருவாக்கி பதினைந்து ஆண்டுகளில் நடுத்தர வர்க்க அமெரிக்கர்கள் அனைவரின் வீட்டிலும் மாடல் டி கார் கம்பீரமாக நின்றது. இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்திய இந்த பொறியாளருக்கு இயந்திரவியல் மீது பேரார்வத்தைத் தூண்டியது ஒரு கைக்கடிகாரம்தான்.
ஆம்! ஹென்றி ஃபோர்டுக்கு அப்போது 14 வயதிருக்கும். அவருடைய அப்பா அவருக்கு ஒரு கைக்கடிகாரத்தை பரிசளித்தார். அதை வெறுமனே கையில்கட்டி அழகு பார்க்கவில்லை இந்த புத்தி ஜீவி. அதை அக்கக்காக கழற்றி மீண்டும் பொருத்தி பார்த்து அதன் சூட்சுமத்தை புரிந்துகொண்டார். அடுத்தபடியாக கைக்கடிகாரத்தைப் பழுதுபார்க்கும் பணியாளராகவே மாறினார். இதனால்தான் என்னவோ மிகப் பெரிய வணிக ஜாம்பவானாக உருவெடுத்த பிறகும் தன்னுடைய நிறுவனத் தொழிலாளர்களின் நலன் மீது மிகுந்த அக்கறைகொண்டு அவர்களுக்கு நிறைவான ஊதியத்தையும் போதுமான ஓய்வையும் வழங்கும் பணித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT