Published : 01 Nov 2019 08:41 AM
Last Updated : 01 Nov 2019 08:41 AM
San Francisco
Apple has put out new gender neutral emojis of most of its people icons as part of an update to its mobile operating system.
The tech giant has offered growing numbers of inclusive emoji designs in recent years, putting out a range of skin tones and occupations.
A wheelchair, guide dog and a flexing prosthetic arm are among Apple's latest batch -- put out with the iOS 13.2 upgrade.
The new gender neutral emojis differ slightly from the male and female ones.
In some, the style and color of their clothes is changed. In others the haircuts are different and a “gender neutral facial structure” is used, says the Emojipedia website.
The attempt at on-screen inclusivity has not pleased everyone however, with some suggesting the icons indicate how gender-nonconforming people should look.
When it unveiled the designs earlier this year, Apple said they would “bring even more diversity to the keyboard” and “fill a significant gap”.
“Users will now be able to select any combination of skin tone, in addition to gender,” it said. Businesses have paid increasing attention to becoming more inclusive in recent times. Toy maker Mattel for example released gender-neutral dolls last month with none of the curves or large muscles of the traditional Barbie or GI Joe.- AFP
சான் ஃப்ரான்சிஸ்கோ
பாலின ரீதியாக நடுநிலையான எமோஜிக்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தன்னுடைய நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தகவமைக்கும் போது இதையும் செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
பல்வேறு சரும நிறங்கள், பலவிதமான பணிமுறைகள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையிலான எமோஜிக்களை சமீப காலமாக இந்த தொழில்நுட்ப ஜாம்பவான் அளித்து வருகிறது.
ஒரு சக்கர நாற்காலி, வழிகாட்டி நாய், செயற்கையாக பொருத்தப்பட்ட கை உள்ளிடவை ஐஓஎஸ் 13.2 பதிப்புடன் தற்போது அறிமுகமாகி இருக்கின்றன.
ஆண்கள், பெண்களுக்குரிய எமோஜிக்களில் இருந்து மூன்றாம் பாலினத்தவருக்கான பாலின நடுநிலை எமோஜிக்கள் சிறிது வேறுபடுகின்றன. குறிப்பாக இந்தவகை எமோஜிக்களில் சிலவற்றில் ஆடையின் வண்ணமும் பாணியும் மாற்றப்பட்டுள்ளன. இதர எமோஜிக்களில் சிகைதிருத்தப்பட்ட விதத்திலும் முக அமைப்பிலும் பாலின நடுநிலைத் தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறது எமோஜிபீடியா இணையதளம்.
ஆனால், இந்த முயற்சி எல்லோரையும் கவரவில்லை. வழக்கமானபாலின பிரிவுக்கு உட்படாதவர்கள் இப்படித்தான் காட்சியளிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதுபோல இந்த ஐகான்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் இந்த வடிவங்களை அறிமுகப்படுத்தும்போது, “விசைப்பலகையில் கூடுதலான பன்முகத்தன்மையை கொண்டுவர இருப்பதாகவும் போதாமையைப் பூர்த்தி செய்யப்போவதாகவும்” ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோல, “விருப்பமான பாலினத்தை தேர்வு செய்துகொள்வதுடன் எத்தகைய சரும நிறத்தையும் பயனாளர்கள் தேர்வு செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்” என்றும் சொல்லியிருந்தது.
வணிக நிறுவனங்கள் சமீப காலமாக அனைவரையும் உள்ளடக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. உதாரணத்துக்கு, பொம்பை தயாரிப்பு நிறுவனமான மட்டல் பாலின நடுநிலை பொம்மைகளைக் கடந்த மாதம் வெளியிட்டது. பார்ப்பி அல்லது ஜிஐ ஜோ போன்ற பாரம்பரியமான பொம்மைகளில் காணப்படும் வளைவு சுளிவுகளோ பெரிய தசைகளோ அவற்றில் இல்லை.-ஏஎப்பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT