Published : 31 Oct 2019 09:44 AM
Last Updated : 31 Oct 2019 09:44 AM
Washington
Researchers have found that plants need the help of friendly fungi to thrive more than it depends on the quality of its own leaves, and on bacteria that adds nitrogen nutrients to the soil.
The researchers, including those from the University of Tennessee in the US, found that certain root-associated, or mycorrhizal, fungi that associate firmly with the cells in plant roots are one of the largest influences on plant tissue nutrient concentrations.The study, published in the journal PNAS.
The researchers analysed more than 17,000 traits from nearly 3,000 woody plant species in six categories, and observed how readily the plant uses nutrients: nitrogen and phosphorous concentrations in green leaves, senescent leaves (leaves that are about to fall off or have recently fallen off), and roots.
The researchers said that plants live in symbiosis with the root associated fungi which provide up to 80 per cent of the nutrients and water a plant needs to grow.
"To optimize plant nutrition, we need to incorporate mycorrhizal associations into our agricultural and management frameworks," said study co-author Stephanie Kivlin from the University of Tennessee.- PTI
வாஷிங்டன்
செழித்து வளர, தன்னிடம் உள்ள இலைகளின் தரத்தை விடவும் நட்பான பூஞ்சைகளின் உதவியை செடிகள் நாடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி மண்ணுக்கு நைட்ரஜன் ஊட்டச்சத்தை ஊட்டும் பாக்டீரியாக்களையும் செடிகள் சார்ந்திருக்கின்றனவாம்.
தாவரங்களின் வேரோடு உறுதியாக தொடர்புகொள்ளும் மைக்கோரைசா வகை பூஞ்சைகள்தாம் தாவரங்களின் திசுவில் உள்ள ஊட்டச்சத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவை. இதை அமெரிக்காவின் டென்னஸி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்பட சிலர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் பி.என்.ஏ.எஸ். ஆய்விதழில் இந்தஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. 6 விதமான தாவரவகைகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மரங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் காணப்பட்ட 17 ஆயிரம் பண்புக்கூறுகளை ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்ந்தார்கள். பச்சை இலைகளிலும் உதிர்ந்த இலைகளிலும் வேரிலும் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தை செடிகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைக் கவனித்தார்கள்.
ஒரு தாவரம் வளர அவசியமான ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரில் 80 சதவீதம் வரை வேருடன் தொடர்புடைய பூஞ்சைகள் வழங்குகின்றன என்றும், அத்தகைய புஞ்சைகளுடன் கூட்டாகத் தாவரங்கள் வாழ்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
‘‘தாவரத்தின் ஊட்டச்சத்தை மேம்படுத்த வேண்டுமானால், நம்முடைய வேளாண்மை மற்றும் நிர்வாக சட்டகத்துக்குள் மைக்கோரைசாவையும் இணைக்க வேண்டும்” என்று டென்னஸீ பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினரான ஸ்டஃபைன் கிவ்லின் தெரிவித்தார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT