Published : 30 Oct 2019 08:34 AM
Last Updated : 30 Oct 2019 08:34 AM

மொழிபெயர்ப்பு: போக்குவரத்தினால் ஏற்படும் இரைச்சல் பறவைகளின் உடலையும் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கும்: புதிய ஆய்வு

Traffic noise affects bird physiology and reproductive health: Study

London

Birds may undergo a change in physiology and reproductive health when living in environments with constant vehicular traffic noise, compared to when they are breeding in a quiet habitat, according to a study which throws light on how disturbances in urban landscapes affects birds.

The study, published in the journal Conservation Biology, noted that the chicks of noise-exposed birds were smaller than the young ones from quiet nests.
The researchers observed a total of 88 birds split into two groups bred in both noise and no-noise conditions.

The noise groups, the researchers said, were exposed to traffic noise recorded at several busy intersections in and around the city of Munich in Germany during the whole breeding period.
After the first breeding period, the researchers said that the noise conditions changed for both groups, and the same bird pairs bred again.

The research team recorded the level of stress hormones before, during, and after the breeding period.
They also took measures of the functioning of the birds' immune systems, and reproductive success, as well as the growth rates of their chicks.

The findings of the study revealed that the birds in constant traffic noise had lower levels of the stress hormone corticosterone in their blood compared to when they were breeding in a quiet environment.- PTI

போக்குவரத்தினால் ஏற்படும் இரைச்சல் பறவைகளின் உடலையும் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கும்: புதிய ஆய்வு

லண்டன்

நகரத்தில் உள்ள தொந்தரவுகள் பறவைகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. இதன்படி அமைதியான சூழலில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் பறவைகளைக் காட்டிலும் இடைவிடாத வாகன போக்குவரத்து உள்ள சுற்றுச்சூழலில் வாழும் பறவைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக அவற்றின் உடலிலும் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. அமைதியான கூட்டில் வாழும் பறவைகளின் குஞ்சுகளை விடவும் இரைச்சலுக்கு இடையில் வாழும் பறவைகளின் குஞ்சுகள் அளவில் சிறியதாக இருப்பதும் ‘கன்சர்வேஷன் பையாலஜி’ ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 88 பறவைகளை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தார்கள். அவற்றை இரைச்சலான சூழல், இரைச்சலற்ற சூழல் என இரண்டு விதமான சூழல்களில் வாழும் பறவைகள் என்ற அடிப்படையில் இரண்டு குழுக்களாகப் பிரித்து ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள்.
இவற்றில் இரைச்சல் குழுவானது தங்களுடைய இனப்பெருக்க காலம் முழுவதும் ஜெர்மனியின் முனிச் நகரத்தின் போக்குவரத்து நெரிசல் நிறைந்த தெருக்களில் வாழ்ந்தவை. அவற்றின் முதல் இனப்பெருக்க காலம் முடிந்தவுடன் இரண்டு பறவைக் குழுக்களின் இருப்பிடமும் மாற்றப்பட்டன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதன் பிறகு மீண்டும் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டன.
இப்போது இனப்பெருக்கத்தின் போதும் அதன்பிறகும் அப்பறவைகளின் மன அழுத்த சுரப்பியின்அளவை ஆராய்ச்சிக் குழுவினர் பதிவு செய்தனர்.

இதனுடன் அவற்றின் எதிர்ப்புச்சக்தி, இனப்பெருக்கத்தில் கிடைக்கும் வெற்றிகரமான முடிவு, அவற்றின் குஞ்சுகளின் வளர்ச்சி விகிதம் ஆகியவையும் கணக்கிடப்பட்டன.

ஆய்வின் முடிவில், இடைவிடாத போக்குவரத்து இரைச்சலில் வாழும் பறவைகளின் ரத்தத்தில் மனஅழுத்தத்தை சமாளிக்கக்கூடிய சுரப்பியான கோர்டிகாஸ்டிரோன் குறைவாகச் சுரப்பது தெரியவந்தது.

அதே பறவைகள் அமைதியான சூழலில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டபோது கோர்டிகாஸ்டிரோன் சுரப்பி இதைவிடவும் மேம்பட்ட நிலையில் செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x