Published : 25 Oct 2019 09:37 AM
Last Updated : 25 Oct 2019 09:37 AM
Crabs can work through maze and remember route to find food: Study
London, Oct 23 (PTI)
In a first, researchers have found that common shore crabs can work their way through a complex maze in order to find food, and can even remember it two weeks later.
The researchers, including those from Swansea University in the UK, tested 12 crabs over four weeks, placing food at the end of the maze each time.
They said that the maze had three dead ends, and to reach the end of the maze the crabs needed five changes in direction.
According to the researchers, the findings can help in designing experiments to understand how changing ocean conditions may affect survival abilities of other marine animals.
The study, published in the journal Biology Letters, revealed that the crabs steadily improved both in terms of the time taken to find the food at the end of the maze, and in the number of wrong turns taken.
The researchers said that when the crabs returned to the maze two weeks later but without any food present at the end, they all reached the end of the maze in under eight minutes -- a sign that they had not sensed their way through, but remembered the route.
- PTI
நண்டுகளுக்கு அபாரமான ஞாபக சக்தி: புதிய ஆய்வு
லண்டன்:
கடற்கரை நண்டுகளால் சிக்கலான புதிரைப் போன்ற பாதையில் பயணம் செய்து உணவைக் கண்டடைய முடியும் என்பதையும், அந்த பாதையை இரண்டு வாரம் கழித்தும் சரியாகஞாபகப்படுத்த முடியும் என்பதையும்ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில், நண்டுகளுக்கு தரப்பட்டபுதிர் பாதையில் மூன்று முட்டுச்சந்துகள் இருந்தன. இவற்றை தவிர்த்து புதிர் பாதையின் எல்லையை அடைய அவை ஐந்து முறை திசைகளை மாற்ற வேண்டி இருந்தது.
கடல் சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் கடல் வாழ் உயிரினங்களின் உயிர் பிழைக்கும் திறன் மீதுஎத்தகைய தாக்கத்தைச் செலுத்தி உள்ளது என்பதை இந்த சோதனையானது உணர்த்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
புதிர் பாதையின் முடிவில் வைக்கப்பட்டிருந்த உணவைக் கண்டடையவும்,தவறான பாதையைத் தவிர்க்கவும் எடுத்துக்கொண்ட கால அவகாசத்தில்படிப்படியாக நண்டுகளிடம் முன்னேற்றம் காணப்பட்டது.
இரண்டு வாரங்கள் கழித்து இதே சோதனை நடத்தப்பட்டது. அதே நண்டுகள் மீண்டும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. அப்போது புதிர் பாதையின் முடிவில் உணவு வைக்கப்படவில்லை. இருந்தும் வெறும்எட்டு நிமிடங்களில் அத்தனை நண்டுகளும் எல்லையை அடைந்தன. இதன் மூலம் அவை ஏற்கெனவே கடந்து சென்ற பாதையை நினைவுபடுத்தி உள்ளன என்பது தெரிய வந்தது.
இந்த ஆய்வுத் தகவல் பையாலஜி லெட்டர்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகி உள்ளது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT