Published : 25 Oct 2019 09:34 AM
Last Updated : 25 Oct 2019 09:34 AM
ஜி.எஸ்.எஸ்.
நூலகத்தில் நூலகர் ராதாவுடன் உரையாடுகிறான் மாணவன் மகேஷ்.
Mahesh – (loudly) Till what time this library is open?Radha – Ush. Be quite. This is library.
Mahesh – Sorry and sorry.
Radha – It is OK. I told because others are reading.
Mahesh – I understand. I again sorry.
Radha – No need to again and again repeat sorry.
Mahesh – I want to take a book written by Shakespeare.
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும்எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
தமிழில், ‘பேசாமல் இரு’ என்பதை‘உஷ்’ என்பதுண்டு. அதை ஆங்கிலத்தில் எழுதும் போது ush என்று எழுத மாட்டோம். Shh என்று எழுதுவோம்.
மகேஷ் sorry and sorry என்கிறான். மிகவும் வருத்தம் தெரிவிப்பதாக இருந்தால், I am very sorry என்று அவன் கூறியிருக்கலாம்.
எழுதும்போது OK, okay என்று இருவிதமாகவும் எழுதுகிறார்கள்.
மகேஷ் மறுமுறை வருத்தம் தெரிவிக்கும்போது again sorry என்கிறான்.
இதை அவன் I feel sorry again என்று கூறியிருக்கலாம்.
No need to again and again repeatsorry என்று நூலகர் ராதா கூறுவதிலும் ஒரு தவறு இருக்கிறது. Repeatஎன்தும் again என்பதும் ஒரேபொருள் கொண்டவை. பிறகு எதற்காக again and again repeat?I want to take a book என்று ஒருநூலகத்தில் கேட்பதைவிட I wantto borrow a book என்ற வாக்கியம் சரியானதாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT