Published : 23 Oct 2019 10:35 AM
Last Updated : 23 Oct 2019 10:35 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? : அருகில் என்பதை தவிர...

ஜி.எஸ்.எஸ்.

ராஜாவும், கிருஷ்ணவேணியும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். உணவு இடைவேளையின்போது அவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

Raja – Have you seen Taj Mahal?
Krishnaveni – Yes. It is one of the wonder of the world.
Raja – Of course, it is in Agra which is besides Delhi.
Krishnaveni – How distant it is from Delhi?
Raja – I do not know rightly.
Krishnaveni – (smiles) Do you at least know wrongly?
Raja – Are you making fun of me?
Krishnaveni – Just like that.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த
உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும்
எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

One of the wonder என்று குறிப்பிடப்படுகிறது. One of the என்று வந்தால் அதைத் தொடர்ந்து பன்மைதான் இடம்பெற வேண்டும். One of the tables, one of the chairs என்பதுபோல. எனவே, one of the wonders என்பதுதான் சரி.

Besides Delhi என்று குறிப்பிடப்படுகிறது. அது beside என்று இருக்க வேண்டும். Beside என்றால் by the side of – அதாவது அருகில். Besides என்றால் அதற்குப் பொருள் ‘தவிர’.

I do not know rightly என்று கூறக் கூடாது. I do not know correctly என்றோ, I do not know exactly என்றோ கூறலாம்.

Are you making fun of me என்றால் என்னைக் கிண்டல் செய்கிறாயா என்று பொருள். Just like that என்றால் சும்மாதான் என்று பொருள். இரண்டுமே பேச்சுவழக்கில் ஏற்கப்பட்டவைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x