Published : 23 Oct 2019 08:30 AM
Last Updated : 23 Oct 2019 08:30 AM
New Delhi,
Oct 20 (PTI) The Delhi government will approach the CBSE with a proposal to treat vocational subjects as main subject in schools and not as additional ones, Deputy Chief Minister Manish Sisodia said.
"All schools should be having vocational subjects in their curriculum. And these subjects should be treated at par with the regular subjects. We aim to make vocational subject as a main subject and not an additional subject. We will be talking to CBSE about this soon," he said.
"In Delhi government schools we will start vocational subjects and will make it main subject instead of it being an additional subject. The upcoming skills university will give preference in admission to students who opted for vocational studies in schools," he added.
Sisodia made the comments at an event at Thyagraj Stadium to celebrate completion of internship training programme of over 5,000 Delhi government school students.
"Abdul Kalam dreamt that school education should give vocational proficiency to students, he shared it with us when we asked him for guidance on school education. I am happy to say that we aremoving towards realising his dream” he said.- PTI
புதுடெல்லி
துணைப் பாடமாக அல்லாமல்முதன்மை பாடமாகத் தொழிற்கல்விப்பாடங்களைக் கருத வேண்டும் என்ற திட்டத்தை சி.பி.எஸ்.இ. பாடக்குழுவிடம் டெல்லி அரசு முன்வைக்க இருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்தார்.
இது குறித்து பேசுகையில், “அனைத்து பள்ளிகளும் தங்களுடைய பாடத்திட்டத்தில் தொழிற்கல்வி பாடங்களையும் கட்டாயம் இணைக்கவேண்டும். அதேபோல வழக்கமான பாடங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் தொழிற்கல்வி பாடங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். வெறும் துணைப் பாடமாக அல்லாமல் முதன்மை பாடமாகத் தொழிற்கல்வி பாடத்தையும் மாற்ற வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. இதுகுறித்து சி.பி.எஸ்.இ.யிடம் விரைவில் பேசுவோம். டெல்லி அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அவ்வாறு கொண்டுவரும்போது அவற்றை துணைப்பாடமாக அல்லாமல் முதன்மை பாடமாகநடத்துவோம். இவ்வாறு பள்ளியில்தொழிற்கல்வியை தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு விரைவில்நிறுவப்படவிருக்கும் திறன் பல்கலைக்கழகத்தின் சேர்க்கையில் முன்னுரிமைத் தரப்படும். பள்ளிக்கல்வியானது சிறந்த தொழிற்கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்என்று கனவு கண்டார் அப்துல் கலாம். பள்ளி கல்வி குறித்து எங்களை வழிநடத்தும்படி கேட்டபோது இவ்வாறுஅவர் எங்களிடம் சொன்னார். அவருடைய கனவை நினைவாக்கும் நோக்கத்தில் இன்று நாம் செயல்பட்டுகொண்டிருக்கிறோம் என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.
தியாகராஜர் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிசோடியா இதனை தெரிவித்தார். 5,000 அரசுபள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்பயிற்சித் திட்டம் நிறைவடைந்ததை ஒட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சி இது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT