Published : 17 Oct 2019 10:47 AM
Last Updated : 17 Oct 2019 10:47 AM
பயணம் செல்லும்போது On மற்றும் In ஆகிய இரண்டு சொற்களின் பயன்பாடு வித்தியாசமாக இருக்கும். எப்படி? இதோ பார்ப்போம்…
பயணம் செல்லும் வாகனத்துக்குள்ளே நடமாட போதுமான இடம் இருந்தால் On என்று குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு, I was on the plane when you called me. (விமானத்துக்குள் நடக்க போதுமான இடம் இருக்கும் அல்லவா. ஆகையால் இங்கு On எழுத வேண்டும்.)
I was on the bus yesterday evening. (அதேபோல பேருந்துக்குள் நடக்கவும் போதுமான இடம் இருக்கும் அல்லவா!)
ஒரு வேளை நீங்கள் பயணிக்கும் வாகனத்துக்குள் நடக்கும் அளவுக்கு இடம் இல்லை என்றால், In என்று எழுத வேண்டும்.
உதாரணத்துக்கு, Get in the car.
எப்படி On மற்றும் In எழுதுவதற்கான இலக்கணம் மாறுபடுகிறதோ அதே போல இவற்றுக்கான எதிர்ச்சொல்லும் வேறுபாடும்.
அதாவது, On-க்கு எதிர்ச்சொல் OffGet off the bus.
In-க்கு எதிர்ச்சொல் Out Get out of the car.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT