Published : 16 Oct 2019 11:07 AM
Last Updated : 16 Oct 2019 11:07 AM
Education is not preparation for life; education is life itself. கல்வி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்புகளைத் தருவதல்ல. கல்வி என்பதுதான் வாழ்க்கையே - ஜான் டூவி செய்து கற்றல் என்ற கல்விக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அமெரிக்க அறிஞரான ஜான் டூவி. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற நம்மூர் பழமொழிக்கு அமெரிக்காவில் செயல்வடிவம் தந்தார் இவர்.
மாணவர்களை மையப்படுத்தியதாகக் கல்வித் திட்டமும் பள்ளிக்கூடமும் இருக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மாணவரும் தனித்தன்மை வாய்ந்தவரே என்றார். ஆகவேதான், சோதனைக் கல்வி முறையின் நவீன தந்தை என்று இவர் வாஞ்சை யோடு அழைக்கப்படுகிறார்.
அறிந்ததும் அறியாததும்
எங்கே AT எழுதுவது?
ஒரு இடத்தை பொதுவாகக் குறிப்பிடும்போது at என்று எழுதவேண்டும். அதாவது வீடு, பேருந்து நிலையம், பள்ளிக்கூடம், கடற்கரை போன்றவற்றைக் குறிக்கும்போது at எழுதுவதே சரி. ஏனென்றால் இங்கெல்லாம் பல அறைகள், பல பேருந்துகள், பல வகுப்புகள் இருக்கும் அல்லவா! கடற்கரையில் அறைகள் இல்லையே என்று யோசிக்க வேண்டாம். பரந்து விரிந்த இடங்களைக் குறிக்கவும் at எழுதுவது வழக்கம்.
உதாரணத்துக்கு,
நண்பர் ஒருவர் அலைபேசியில் உங்களை அழைத்து, “Where are you?” (“எங்கே இருக்கிறாய்?”) என்று கேட்கிறார்.
நீங்கள், “I am at home” (“நான் வீட்டில் இருக்கிறேன்”) என்று சொல்கிறீர்கள்.
மீண்டும் அவர், “Yes, but where in the house?” (சரி, வீட்டுக்குள் எங்கே இருக்கிறாய்?) என்று கேட்கிறார்.
அப்போது நீங்கள் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தால், “I am playing in the terrace” என்று சொல்ல வேண்டும்.
இப்போது at-க்கும், in-க்கும் இடையிலான வித்தியாசம் புரிந்ததா!
At -க்கு மேலும் சில உதாரணங்கள்:
They are at the beach.
I am at work.
Raja is at School.
நேரத்தை குறிக்கவும் at எழுதுவது உண்டு. உதாரணத்துக்கு, I have English class at 6 a.m.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT