Published : 15 Oct 2019 11:42 AM
Last Updated : 15 Oct 2019 11:42 AM

மொழிபெயர்ப்பு:  'ஸ்டெம்' கல்வியை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது டெல்லி அரசு

Girl students in Delhi govt schools to have option of STEM education

New Delhi

The Delhi government is introducing Science, Technology, Engineering and Mathematics (STEM) education for girl students in its schools to ensure majority of them opt for the stream and stereotypes like boys for science and girls for humanities are broken. Deputy Chief Minister Manish Sisodia made the announcement on Friday at the launch of mobile app EY STEM Tribe, which features modules on Science and Technology like climate change, space exploration, artificial intelligence, 3D printing.

"In India, only 2 per cent of the CEOs are female. And only one per cent of the CFOs are female. Higher secondary classes of Delhi government schools have 57 per cent students as females while only 43 per cent are in Science stream. This situation and stereotypes like boys for science and girls for humanities need to be broken now. Through the EY STEM Tribe platform we want to encourage our girl students to acquire 21st century skills necessary to secure jobs not just in India, but globally. We want more girls to be inspired to pursue science and related subjects" Sisodia said.

- PTI

'ஸ்டெம்' கல்வியை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது டெல்லி அரசு

புதுடெல்லி

'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கல்வியை டெல்லி அரசு பள்ளி மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த படிப்புதான் உகந்தது, மாணவிகளுக்கு கலைப் படிப்புகள்தான் ஒத்துவரும் என்ற வழக்கத்தை உடைத்திருக்கிறது டெல்லி அரசு.
வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பான ‘இ.ஒய். ஸ்டெம் டிரைப்’ எனப்படும் மொபைல் செயலியை டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலியில், காலநிலை மாற்றம், விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா பேசுகையில், ”இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தலைமை செயல் அதிகாரிகளில், 2 சதவீதம் மட்டுமே பெண்கள். தலைமை நிதி அதிகாரி பொறுப்பை வகிப்பவர்களில் ஒரே ஒரு சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். இதேபோல டெல்லியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிப்பவர்களில் 57 சதவீதத்தினர் மாணவிகளாக இருந்தாலும் அவர்களில் 43 சதவீதத்தினர் மட்டுமே அறிவியல் பாடத்தில் பயில்கின்றனர்.

ஆக, மாணவர்கள் என்றாலே அறிவியல் படிப்பவர்கள், மாணவிகள் என்றாலே கலைப் படிப்புகளை படிப்பவர்கள் என்ற வழக்கத்தை உடைக்க வேண்டும். இந்த இ.ஒய்.ஸ்டெம் டிரைப் செயலி மூலம், இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் வேலைவாய்ப்புகளை பெறத் தேவையான 21-ம் நூற்றாண்டின் திறமைகளை நமது மாணவிகள் பெறவேண்டும் என்பதே அரசின் இலக்கு. எனவே, இந்த பாடங்களை மாணவிகள் பயில ஊக்குவிக்க வேண்டியது நமது கடமை” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x