Published : 15 Oct 2019 11:37 AM
Last Updated : 15 Oct 2019 11:37 AM

அறிந்ததும் அறியாததும்

எங்கே ON எழுதுவது?

நம்மை சூழ்ந்திருக்கும் ஒன்றை குறிக்கும்போது in எழுத வேண்டும் என்று நேற்று பார்த்தோம். வாருங்கள் மாணவர்களே, எப்போதெல்லாம் on எழுதவேண்டும் என்பதை இன்று தெரிந்துகொள்வோம். குறிப்பிட்ட ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டும்போது on எழுத வேண்டும். உதாரணத்துக்கு, I am in my room, but I am on a chair.

குழப்பமாக இருக்கிறதா?

சரி, மேலும் விளக்கமாக தெரிந்துகொள்வோம். உங்களுடைய சைக்கிள் சாவியை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அம்மாவிடம் நீங்கள் கேட்கிறீர்கள், “Amma, do you know where is my bi-cycle key?”
அதற்கு அம்மா பதிலளிக்கிறார், “The key is on the bedroom table”.
ஒருவேளை, “The key is in the bedroom” என்று அம்மா சொல்லி இருந்தால் அந்த சாவியைக் கண்டுபிடிப்பது இன்னும் கூடுதல் கடினமாகி இருக்கும் அல்லவா!
ஏனென்றால், in எனும்போது அங்குத் துல்லியம் இல்லை. ஆனால், on என்று சொல்லும்போது மிகச் சரியாக எங்கிருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

வெற்றி மொழி

Education is the ability to listen to almost anything without losing your temper or your self-confidence. - Robert Frost

மனநிலை தடுமாறாமலும் தன்நம்பிக்கை இழக்காமலும் எல்லாவற்றையும் நீங்கள் கவனிக்கும் திறனை உங்களுக்கு அளிப்பதுதான் கல்வி - ராபர்ட் ஃப்ராஸ்ட் மனித உணர்வுகளையும் கிராமப்புற வாழ்க்கையின் அழகையும் தன்னுடைய கவிதைகளில் தத்ரூபமாக வடித்தவர் அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட். ‘The Road Not Taken’ உள்ளிட்ட உலகப் புகழ்வாய்ந்த கவிதைகளை படைத்தவர். கவிதைக்கான மிக உயரிய விருதான புலிட்சர் பரிசை நான்கு முறை பெற்றவர்.

கல்வி குறித்த தன்னுடைய பொன்மொழியில், அனைத்தும் அறிந்து வைத்திருப்பதே கல்வி என்று சொல்லவில்லை கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட். மாறாக, எந்த கருத்தாக இருப்பினும் அதை கூர்ந்து கவனிக்கும் ஆற்றல்தான் கல்வி என்கிறார். அதிலும் பதற்றமடையாமல், தன்னம்பிக்கை இழக்காமல் அவ்வாறு கவனிப்பதே கல்வி என்கிறார்.
அவர் கல்விக்கு அளிக்கும் விளக்கம் வியப்பாக இருக்கிறதல்லவா மாணவர்களே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x