Published : 11 Oct 2019 11:10 AM
Last Updated : 11 Oct 2019 11:10 AM
ஜி.எஸ்.எஸ்.
பசுபதியும், ரமணணும் பள்ளி மாணவர்கள். அவர்கள் உரையாடலின் ஒரு பகுதி இது.
Pasupathi – How is life?
Ramanan – Going on.
Pasupathi – I want to talk to you. Do you have lot of work?
Ramanan – Not at all.
Pasupathi – How many brothers and sisters do you have?
Ramanan – I have one elder brother and one sister.
Pasupathi – I only have one sister.
மேலே உள்ள உரையாடலைப் படித்த போது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள். மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
How is life? என்ற கேள்விக்கு going
on என்று பதிலளிப்பதில் தவறில்லை. ஆனால், அதன் அர்த்தம் “ஏதோ போயிட்டிருக்கு’’ என்பதுபோல லேசான எதிர்மறைப் பொருளையும் கொடுக்கிறது.
“As usual” என்று பதிலளித்தால் அதில் எதிர்மறைத் தன்மையும் இல்லை, நேர்மறைத் தன்மையும் இல்லை. வாழ்க்கை உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்பினால் “Interesting” என்ற விடையை அளிக்கலாம்.
பசுபதி ‘Do you have lot of work?’
என்று கேட்கிறான். இதற்குப் பதிலாக Are you busy? என்று கேட்பது மேலும் இயல்பான ஒரு கேள்வி. இதைக் கேட்கும்போதே மறைமுகமாக “எனக்குக் கொஞ்ச நேரம் ஒதுக்க முடியுமா?’’ என்ற அர்த்தமும் வந்துவிடும்.
ரமணன் “One elder brother and one sister” என்கிறான். Brother-ஐ elder Brother என்று குறிக்கும் அவர் sister-ஐயும் அப்படிக் குறிக்க வேண்டும். (அதாவது elder Sister என்றோ younger Sister என்றோ).
Sibling என்று ஒரு வார்த்தை இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது சகோதரன், சகோதரி ஆகிய இரண்டையுமே குறிக்கும் சொல். உடன்பிறப்பு என்று வைத்துக் கொள்ளலாம்.
பசுபதி I only have one sister என்கிறான். இதற்குப் பொருள் அவனுக்கு மட்டுமே ஒரு சகோதரி இருக்கிறாள் என்றாகிறது (அதாவது அவனைத் தவிர வேறு யாருக்குமே சகோதரி இல்லை என்பதுபோல் ஆகிறது). அவன் ‘”I have only one sister” என்று கூறியிருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT