Published : 10 Oct 2019 11:24 AM
Last Updated : 10 Oct 2019 11:24 AM
Girl saves brother from leopard attack in Uttarakhand village
Pauri, Oct 9 (PTI) Showing indomitable courage, an 11-year-old girl saved her younger brother from a leopard attack in Devkundai Talli village in the district but was badly injured in the process.
The incident took place on October 4 when the girl identified as Rakhi was playing with her 4-year-old brother and was attacked by the leopard, her aunt Madhu Devi said, giving details of the incident.
Instead of running away, the girl lay over her brother to cover him and saved him from the big cat. Though the boy remained largely unharmed, she received severe neck injuries, Madhu Devi said.
The villagers soon gathered at the spot and raised an alarm following which the leopard ran into the forest.
She was rushed first to a nearby hospital from where she was referred to a higher centre considering the seriousness of the injuries she had received in the attack.
மொழிபெயர்ப்பு:
உத்தரகாண்ட் கிராமம்: சிறுத்தையிடம் இருந்து தம்பியை காப்பாற்றிய சிறுமி
பவுரி
அசாதாரணமான துணிச்சலால் சிறுத்தை தாக்குதலில் இருந்து தன் தம்பியை காப்பாற்றியுள்ளார் 11 வயது சிறுமி. உத்தரகாண்டில் உள்ளபவுரி மாவட்டத்தை சேர்ந்த தேவ்குந்தை தள்ளி என்ற கிராமத்தில் நடந்த சிறுத்தை தாக்குதலில் இந்த சிறுமி படுகாயம் அடைந்தார்.
“இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 4 அன்று சிறுமி ராக்கி அவரது 4 வயது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது சிறுத்தை தாக்கியது” என்றார் சிறுமியின் அத்தை மது தேவி. மேலும்,“சிறுத்தையை பார்த்த மாத்திரத்தில்அங்கிருந்து ஓடிவிடாமல் தனதுதம்பியை அரவணைத்து சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றியுள்ளார்” என்று கூறினார்.
அவரது தம்பிக்கு பெரிதாக காயங்கள் ஏதும் ஆகாமல் தன் கழுத்தில் பலமான காயங்களுடன் காப்பாற்றினார். அப்போது கிராம மக்கள் வந்ததும் சிறுத்தை காட்டுக்குள் ஓடியவிட்டது. காயம் ஏற்பட்டிருந்த வேளையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு ஏற்பட்டிருந்த பலத்த காயம் காரணமாக உயர் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவ மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.-
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT