Published : 10 Oct 2019 11:22 AM
Last Updated : 10 Oct 2019 11:22 AM

ஆங்கிலம் அறிவோம்: வெற்றி மொழி

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள், கல்வியாளர்களின் பொன்மொழிகளைத் தமிழில் தெரிந்துகொள்வோமா மாணவர்களே!

Work and worship are necessary to take away the veil, to lift the bondage and illusion – Swami Vivekananda

திரைகளை, அடிமைத் தளையை, மாயையை அகற்ற உழைப்பும் வழிபாடும் அவசியம் - சுவாமி விவேகானந்தர்

The greatest education is that which does not merely give us information but makes our life in harmony with all existence. - Rabindranath Tagore

மிக உயரிய கல்வி எதுவெனில், நமக்கு வெறுமனவே தகவல்களைத் தருவது அல்ல. வாழ்க்கையோடு ஒத்திசைந்து வாழக்கூடிய விதமாக நம்மை உருவாக்குவதே! - ரவிந்திரநாத் தாகூர்.


அறிந்ததும் அறியாததும்

அதே சட்டை!

தனித்தனியாக இரண்டு வாக்கியங்களை எழுதும்போது A, the ஆகிய இரண்டையும் எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நேற்றுப் பார்த்தோம் இல்லையா மாணவர்களே!

ஒரே வாக்கியத்தில் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை இன்று அறிந்துகொள்வோம் வாருங்கள்.

Premkumar bought a shirt last week. He wants to wear a shirt on day of Deepavali.
Premkumar bought a shirt last week. He wants to wear the shirt on day of Deepavali.

இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரிகிறதா?

பிரேம்குமார் கடந்த வாரம் ஒரு சட்டையை வாங்கினேன். அந்த சட்டையை தீபாவளி அன்று அணிந்துகொள்ள விரும்புகிறான்.
இப்படிச் சொல்லும்போது, ஏதோ ஒரு சட்டை எனும்போது ‘a shirt’ என்றும், வாங்கிய அதே சட்டையை அணிந்துகொள்ள விரும்புகிறான் எனும்போதும் ‘the shirt’ என்று எழுதுவதுதான் சரி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x