Published : 31 Dec 2024 06:19 AM
Last Updated : 31 Dec 2024 06:19 AM
கோட்டை, இரவு ஆகிய இரண்டின் ஆங்கில வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது fortnight என்ற சொல். மாதமிருமுறை என்ற பொருளில் நாம் பயன்படுத்தும் அந்தச் சொல்லுக்குப் பின்னால் கோட்டை, இரவு போன்றவற்றின் வரலாறு ஏதாவது உண்டா?
Chillax வாசகரே.
முதலில் fortnight. இந்தச் சொல்லுக்கும் கோட்டைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதிலுள்ள fort என்பது 14 ஐக் குறிக்கும் fourteen என்பதன் சுருக்கம். பதினான்கு இரவுகள் என்ற அர்த்தத்தில் அமைந்துள்ளது fortnight.
Chillax என்பது கூட chill, relax என்று இரண்டு சொற்களின் தொகுப்பு. Chillax என்றால் கூலாக இரு. டென்ஷன் வேண்டாம் என்று பொருள். We invite you for a chillaxing evening.
இப்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளின் கலவையை portmanteau என்பார்கள். நாம் மிக அதிக அளவில் பயன்படுத்தும் intercom என்ற சொல்கூட இந்த வகையைச் சேர்ந்ததுதான். Internal + Communication. Email என்பது electronic, mail.
அது சரி, இப்படிப்பட்ட ஒன்றில் இரண்டு வகையில் வார்த்தைகளை உணர்த்த portmanteau என்ற கரடுமுரடான சொல்லை எதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதற்கும் காரணம் உண்டு.
அது ஒரு பிரெஞ்சு வார்த்தை. அந்த மொழியில் இரண்டு தடுப்புகள் கொண்ட சூட்கேசை அப்படி கூறுவார்கள். அதேபோல இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைச் சுமக்கும் சொல்லையும் portmanteau என்று ஆங்கிலத்தில் இறக்குமதி செய்திருக்கிறார்கள்.
Portmanteau என்பதை போர்ட்-மான்-டோ என்று உச்சரிக்க வேண்டும். அதில் மான் என்ற பகுதிக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
The car turned turtle என்று விபத்து பற்றிய செய்தி ஒன்றில் படித்தேன். இதற்கு என்ன பொருள்?
Turtle என்றால் ஆமை. ஆமைக்குக் கவசமாகச் செயல்படுவது அதன் தடிமனான முதுகு ஓடு. ஆமை தலைகீழாக இருந்தால், அந்த ஓடு அதற்குப் பாதுகாப்பு அளிக்காது.
The car turned turtle என்றால் அது தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது என்று பொருள். பாதுகாப்பற்ற நிலை.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT